Amala paul: டாடி லைஃப்.. குழந்தைக்காக எவ்வளவு செய்றாரு ஜெகத்.. அமலா பால் வெளியிட்ட வீடியோ!

சென்னை: நடிகை அமலா பால் மற்றும் ஜெகத் தேசாய் ஜோடிக்கு கடந்த 11ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன் கொண்டாட்ட தருணங்களை வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார் அமலா பால். முன்னதாக தான் மருத்துவமனையில் இருந்து வீடு வந்த வீடியோவை வெளியிட்டு இருந்த அமலாபால், தன்னுடைய குழந்தை பிறப்பு குறித்தும் அறிவித்திருந்தார்.

அமலா பால் தன்னுடைய குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்த வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

Amala paul Jagat desai tamil cinema

நடிகை அமலா பால்: நடிகை அமலாபால் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். தமிழில் விஜய், தனுஷ், சூர்யா என லீட் ஹீரோக்களுடன் நடித்து வெற்றி படங்களை கொடுத்தவர். முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருந்தபோதே இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அமலாபால். சிறிது காலங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்த அமலா பால், தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். ஏ.எல்.விஜய்யுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் அவருடன் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அமலா பால் -ஜெகத் தேசாய் திருமணம்: இதையடுத்து தனது நீண்ட கால நண்பர் ஜெகத் தேசாயை கடந்த ஆண்டில் அமலா பால் திருமணம் செய்துக் கொண்டார். தொடர்ந்து தன்னுடைய கர்ப்பம் குறித்து கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து கர்ப்ப கால வீடியோக்களை பகிர்ந்து வந்தார். தன்னுடைய கணவருடன் இணைந்து பல கொண்டாட்ட தருணங்களை அவர் அடுத்தடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்த நிலையில் கடந்த 11ம் தேதி அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் வீடியோவுடன் அறிவித்திருந்தார். மேலும் தன்னுடைய குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இலை என்றால் சொர்க்கம் என்று பொருள் என்பது தெரியவந்துள்ளது.

கணவர் குறித்த வீடியோ: இந்நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்த வீடியோக்களை பகிர்ந்து வருகிறார் அமலா பால். தான் குழந்தை பெற்றுக் கொண்ட மருத்துவமனையின் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் குழந்தை பிறந்த பின்பு அமலா பால் அனைவருடனும் இணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது அமலா பால் வெளியிட்டுள்ள வீடியோவில் குழந்தைக்காக தன்னுடைய கணவர் ஜெகத் தேசாய் செய்து வரும் விஷயங்களை அவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். டாடி லைஃப் என்று அமலா பால் பதிவிட்டுள்ள வீடியோவில் ஜெகத் தேசாய் தன்னுடைய குழந்தைக்காக தொட்டிலை அமைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

அமலா பால் மகிழ்ச்சி: இதை மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் வெளியிட்டுள்ளார். அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அமலா பால், ஏ.எல். விஜய் உடனான விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து ஆடை உள்ளிட்ட அதிரடி படங்களில் நடித்திருந்தார். தயாரிப்பையும் துவங்கி கடாவர் என்ற படத்தை ரிலீஸ் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது குழந்தை பிறந்துள்ள நிலையில் அமலா பால் தொடர்ந்து நடிப்பாரா அல்லது தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. விரைவில் இதற்கான பதிலை அமலா பால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X