Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தெலுங்குப் படங்களில் நடிக்க விருப்பமில்லை.. அமலாபால் எதுக்காக இப்படி சொன்னாங்க தெரியுமா?
சென்னை : நடிகை அமலாபால் விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர். தொடர்ந்து நடித்து வருகிறார்.
இயக்குநர் ஏஎல் விஜய்யுடனான பிரிவுக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இவரது ஆடை படம் மிகவும் அதிரடியாக அமைந்தது.
நடிகையாக தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்த அமலா பால், தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.
இறைவியைத் தொடர்ந்து ஜிகர்தண்டா 2வில் இணையும் எஸ்ஜே சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி?
நடிகை அமலா பால்
நடிகை அமலா பால் தென்னிந்திய மொழிகளில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழ், மலையாளத்தில் சிறந்த படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழில் இவரது என்ட்ரியே மிகவும் அதிரடியாக அமைந்தது. சிந்து சமவெளி என்ற படத்தில் ஹரீஷுடன் இணைந்து இவர் நடித்திருந்தார்.
அதிரடி கேரக்டர்
முதல் படத்திலேயே தன்னுடைய மாமனாரை விரும்பும் கேரக்டரில் நடித்து அதிரடி கிளப்பினார். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக அமைந்த போதிலும், அதேமாதிரியான கேரக்டர்களில் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் வந்தநிலையில் சுதாரித்துக் கொண்ட அமலா பால், மைனா என்ற படத்தில் நடித்தார்.
மைனா படம்
முதல் படத்தை போல இல்லாமல் இந்தப் படத்தில் பள்ளி மாணவியாக, வெள்ளந்தியான கேரக்டரில் தன்னுடைய இயல்புக்கு மாறாக நடித்திருந்தார் அமலா பால். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. அவரது கேரியரில் பெஸ்ட் படமாக அமைந்தது. இந்தப் படங்களை தொடர்ந்து அதிகமான படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடிக்க இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
விஜய், தனுஷுடன் ஜோடி
குறிப்பாக தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி ஒன்று மற்றும் இரண்டில் நடித்த அமலா பால், விஜய்யுடன் அவரது சிறப்பான படமான தலைவா படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். முக்கியமாக நடிக்க ஸ்கோப் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்தார்.
காதல் திருமணம்
தொடர்ந்து இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அமலா பால், சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்யும் முடிவையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இந்த பிரிவு அறிவிப்பிற்கு பிறகு இவரது நடிப்பில் ஆடை உள்ளிட்ட அதிரடி படங்கள் மீண்டும் ரிலீசாகின.
அதிரடி ஆடை படத்தின் கேரக்டர்
இந்தப் படத்தின் பெயர் ஆடை என்ற போதிலும், ஒரு இரவு முழுக்க ஆடையில்லாமல் இருக்கவேண்டிய சூழலில் சிக்கும் பெண்ணின் சூழ்நிலையை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. அமலா பாலுக்கும் சிறப்பான பெயரை இந்தப் படம் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து சமீபத்தில் இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடாவர் என்ற படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது.
கடாவர் படம்
இந்தப் படத்தில் தடயவியல் நிபுணராக நடித்திருந்தார் அமலா பால். இந்தப் படம் 4 ஆண்டுகள் கழித்தே ரிலீசானது. இதனிடையே இந்தப்படத்தின் கதை அனைவரையும் ஈர்க்க தவறியது. கலவையான விமர்சனங்களையே பெற்றது. தொடர்ந்து தற்போது வாய்ப்புகள் அதிகமாக இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் அதிகமாக ஆக்டிவாக உள்ளார் அமலாபால்.
அதிகமான பாலோயர்கள்
இன்ஸ்டாகிராமில் இவரை 4 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் அதிகமாக தெலுங்குப் படங்களில் நடிக்காதது குறித்து தற்போது மனம் திறந்துள்ளார் அமலாபால். தெலுங்குப் படங்களில் அதிகமான கமர்ஷியல் படங்களே உருவாகும் என்றும் அதில் ஹீரோயின்களை அதிகமாக பாடல் மற்றும் காதல் காட்சிகளில் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் அமலா பால் தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் நடிக்க ஆர்வமில்லை
இது போன்ற கேரக்டர்களில் நடிக்க தான் எப்போதுமே விரும்பியதில்லை என்றும் இதனால்தான் தான் தெலுங்குப் படங்களில் நடிப்பதில் இருந்து நீண்ட நாட்களாக விலகியுள்ளதாகவும் அமலா பால் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே மணிரத்னத்தின் பொன்னியில் செல்வன் படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அதை ஏற்கும் சூழல் அப்போது இல்லை என்றும் அமலா பால் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.