அமலா பால் நடிப்பில் வெளியான அட்டகாசமான படங்கள்.. இதெல்லாம் கண்டிப்பா பார்த்தே ஆகனும்!

சென்னை: அமலா பால் நடிப்பில் வெளியான அட்டகாசமான திரைப்படங்கள் எவை எவை என்பது குறித்த ஓர் பார்வை..

நடிகை அமலா பால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். திறமையான நடிகையான இவர் மலையாள சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

கேரியரை தொடங்கியது முதல் தற்போது வரை ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தன்னை தானே வளர்த்து வருகிறார். அந்த வகையில் ஆடை முதல் மைனா வரை அவரது சிறந்த படங்களை காணலாம்.

மைனா

மைனா

நடிகை அமலா பால் லீடிங் ரோலில் நடித்தார். அவரது சிறந்த நடிப்பால் மக்களின் கவனத்தை பெற்றார். இப்படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்காக ஒரு பிலிம்பேர் விருது மற்றும் வேறு சில விருதுகளைப் பெற்றார் அமலா பால். இந்தப் படத்தில் அமலா பால் ஒரு டீனேஜ் பெண்ணாக நடித்தார். பிடிக்காத திருமணத்தை தவிர்க்கும் ஒரு பெண்ணாக நடித்தார். இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக நடித்தார் அமலா பால். இருவருக்கும் இடையிலான காதல் காட்சிகளும் ரொமான்ஸும் பெரும் எதிர்பார்ப்பை பெற்றது.

 வேலையில்லா பட்டதாரி

வேலையில்லா பட்டதாரி

அடுத்து வேலையில்லா பட்டதாரி படம்.. இந்தப் படத்தின் கதை ஒரு வேலையற்ற பொறியியல் பட்டதாரி தனது தகுதிகளுக்கு ஏற்ற வேலையை பெற போராடுவதை மையப்படுத்தி இருந்தது. இப்படத்தில் தனுஷ் ஒரு பொறியாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்தார். ஒரு காதலியாக, அமலா பால் தனுஷை தனது வாழ்க்கையில் ஊக்கப்படுத்தி அவர் மீது அன்பை பொழிவதாக நடித்திருந்தார். வேல்ராஜ் இயக்கிய 'வேலையில்லா பட்டதாரி' மிகவும் சுவாரஸ்யமான தமிழ் படங்களில் ஒன்றாகும். இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

 பசங்க 2

பசங்க 2

அடுத்து பசங்க 2... இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு மனைவியாக நடித்திருந்தார் அமலா பால். இந்தப் படம் குழந்தைகளின் கவனக்குறைவு மற்றும் ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இதில் ஆசிரியையாக நடித்திருப்பார் அமலா பால். இப்படத்தில் கணவன் மனைவியான சூர்யாவும் அமலாபாலும் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற மெஸேஜை கூறியிருந்தனர். இப்படத்தில் கார்த்திக் குமார், பிந்து மாதவி, முனிஸ் காந்த் மற்றும் வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 அம்மா கணக்கு

அம்மா கணக்கு

அடுத்து அம்மா கணக்கு.. இந்தப் படத்தில் 'தனது மகளுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதற்காக பணிப்பெண்ணாக, பணிபுரியும் ஒரு விதவை தாயாக நடித்திருப்பார் அமலா பால். இந்தப் படத்தில் ஒரு தாய் தனது மகளின் படிப்புக்காக பல கஷ்டங்களைப்பட்டு இறுதியில் வெற்றி பெறுவதாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த படம் ஒரு விதவை தாயின் போராட்டங்களை சித்தரித்தது. மேலும் அமலா பால் ஒரு தாயாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அம்மா கணக்கு படத்தில் ரேவதி, சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 ஆடை படம்..

ஆடை படம்..

கடைசியாக ஆடை படம்.. ஆடை படத்தில், அமலா பால் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை கொண்டாடும் ஒரு பெண்ணின் பாத்திரத்தில் நடித்தார். அவர் கிட்டத்தட்ட ஒரு டாம்பாய் போன்று விரும்பியதை செய்து வாழ்க்கையை ரசிக்கிறார். அப்போது ஒரு பயங்கரமான சம்பவத்தை எதிர்கொள்கிறார் அமலா பால். ரத்ன குமார் இயக்கிய இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது. குறிப்பாக அமலா பால் இப்படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்திருந்தார்.இதில் விவேக் பிரசன்னா மற்றும் ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் நடித்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X