அமலாபால் பகிர்ந்த படுக்கையறை புகைப்படம் . வாவ்.. என வாய் பிளந்த ரசிகர்கள் !
கொச்சி : சிகப்பு நிற மின்விளக்குகளால் அறை முழுவதையும் ஒளிரவிட்டுக்கொண்டு , தம்மாத்தூண்டு உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து இருக்கிறார் நடிகை அமலாபால்.
நாளுக்கு நாள் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு ரசிகர்களை மீண்டும் குதூகலிக்க வைத்து வருபவர் நடிகை அமலா பால்.
லாக்டவுனில் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் அமலாபால் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ரவுண்ட் கட்டி
தமிழில் நடித்த முதல் படமே சர்ச்சைக்குரிய படமாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து பல படங்களை நல்ல கதாபாத்திரங்கள் மூலம் நடித்து மலையாளம், தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ரவுண்ட் கட்டி நடித்துக் கொண்டிருந்தவர் அமலாபால் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

அம்மா கணக்கு
அல்லு அர்ஜுன், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்த அமலா பால் தற்பொழுது பெண்களை மையமாகக் கொண்டுள்ள திரைப்படங்களின் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் இவர் முதன்முதலில் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அம்மா கணக்கு திரைப்படத்திற்கு பிறகு, தொடர்ந்து லீட் ரோலில் நடிக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார்.

உடலில் ஒட்டுத்துணி இல்லை
மேயாதமான் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ஆடை திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து அனைவரையும் அசர வைத்திருந்த அமலாபால் அந்த படத்தில் பெரும்பாலான காட்சிகளில் உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் பல காட்சிகளில் நடித்ததாக சொல்லப்படுகிறது.

தனக்கு பிடித்த
திரையரங்கத்தை அதிர வைத்த ஆடை திரைப்படம் ஒரு பக்கம் மிகப்பெரிய வெற்றியடைந்திருந்தாலும் மறுபக்கம் இவரை சுற்றி சர்ச்சைகள் சுழன்று கொண்டே இருக்கின்றது. எனும் அதைப்பற்றியெல்லாம் இவர் துளி கூட கவலைப்படாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என தனக்கு பிடித்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். மேலும் ஆடை படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து "அதோ அந்த பறவை போல" என்ற படத்திலும் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

பரபரப்பான சண்டை
சில மாதங்களுக்கு முன்பு அதோ அந்த பறவை போல படத்திற்கான ட்ரைலர் வெளியாகியது அதில் அடர்ந்த காடுகளையும் பரபரப்பான சண்டைக் காட்சிகளையும் கொண்டிருந்த இந்த படத்தின் முன்னோட்ட காட்சிகள் பலரையும் கவர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

வழக்கமாக கொண்டுள்ள
சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள அமலாபால் அதில் சில சமயம் சர்ச்சைக்குரிய கவர்ச்சி போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார். இவ்வாறு பகிரப்படும் போட்டோக்கள் ரசிகர்களால் ரசிக்கப்பட்டும் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

படுக்கையறையில் குப்புறபடுத்து
தற்பொழுது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ ஒன்று அனைவரையும் ஈர்த்துள்ளது. அதில் சிகப்பு நிற மின்விளக்குகளால் அறை முழுவதையும் எரியவிட்டு கொண்டு கருப்பு நிறத்தில் தம்மாத்தூண்டு டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு படுக்கையறையில் தலையணையை கட்டி அணைத்தபடி குப்புற படுத்துக்கொண்டு, காலழகு முழுவதும் தெரியும் படி தலையை உயர்த்தி கிறங்கவைக்கும் பார்வை பார்த்துள்ளார். இந்த வசீகரமான பார்வைக்கு அடிமை ஆகாதவர்கள் எவருமே இல்லை.

எக்ஸ்பிரஸ் வேகத்தில்
படுக்கையறையில் படுத்துக்கொண்டு அனைவரையும் மயக்கும் வகையில் பார்வையிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பரவி வருகிறது. இதைப்பார்த்தை ரசிகர்கள் அவரை வர்ணித்தும் வாவ் என்றும் ஆஹா, ஓஹா என்றும் புகழ்ந்து வருகின்றனர். மேலும் பலர் அவரை வறுத்தெடுத்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











