அமலா பாலுக்கு வளைகாப்பா? அட என்ன இப்படி வெட்கப்படுறாங்க.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த அழகிய நடிகைகளில் ஒருவர் தான் அமலா பால். சிந்து சமவெளி படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து மோசமாக விமர்சிக்கப்பட்ட இவர், அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து திறமையான நடிகை என பெயர் எடுத்த அமலா பாலுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்ற நிலையில், அவ்வப்போது கணவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
நடிகை அமலா பால் என்றால் சர்ச்சை, சர்ச்சை என்றால் அமலா பால் என்று சொல்லும் அளவிற்கு சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர், சிந்து சமவெளி படத்தில், கணவரை படிக்க ஊருக்கு அனுப்பிவிட்டு, மாமனாருடன் வாழ்த்து வருவார். இதுவரை இது போன்ற கதைய பார்க்காத நம்ம தமிழ் ஆடியன்ஸ் அமலா பாலை கடுமையாக விமர்சித்தனர். அந்த படத்தோடு மூட்டை முடிச்சியை கட்டிக்கொண்டு ஓடுவார் என்று பார்த்தால், துணித்து மைனா படத்தில் நடித்தார்.

நடிகை அமலா பால்: இந்த படத்தில் துளியும் மேக்கப் இல்லாமல், தனது திறமையை மட்டுமே நம்பி நடித்து பெயர் எடுத்தார். மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த படத்தில் அவ்வளவு பவ்யமான காதலியாக நடித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்தார். குறிப்பாக அந்த படத்தில் அவரது கண்ணழகே பலரை மைனா படத்தை பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.
வெற்றிபெறவில்லை: இந்த படத்தை தொடர்ந்து, தெய்வத்திருமகள், சேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, ஆடை, உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். இதையடுத்து, நடிகர் அமலா பால் ஏ. எல் விஜய் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் சில வருடத்திலேயே அவர்களுக்குள் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த நேரத்தில், தனுசுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதன் சினிமா வாழ்க்கையை தொலைத்த அமலா பால், ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து மீண்டும் பெயரை கொடுத்துக்கொண்டார். அவர் அவ்வளவு மெனக்கெட்டு நடித்த போதும், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

காதல் திருமணம்: இதைத்தொடர்ந்து சில ஆண்டுகள் படவாய்ப்பு இல்லாமல் இருந்த அமலா பால், இன்ஸ்டாகிராமல் தத்துவத்தை அவ்வப்போது பேசி வந்தார். மேலும், மும்பையை சேர்ந்த வேறொருவருடன் ரகசிய திருமணம் செய்து கொண்டு அவரையும் பிரிந்தார். அமலா பால் தற்போது மீண்டும் காதலர் ஜெகதீசா என்பவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2024 ஜனவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக திருமணமான இரண்டே மாதத்தில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார்.
அமலா பாலுக்கு வளைகாப்பா: கர்ப்ப காலத்தில் அவர் செய்யும் எல்லா விஷயங்களையும் சேட்டைகளையும் வீடியோ மற்றும் புகைப்படம் என எல்லாவற்றையும் தன்னை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையத் தற்போது ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கும் அமலா பால், கை நிறைய மருதாணி போட்டுக்கொண்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதுக்குள்ள வளைகாப்பா என்று கேட்டு வருகின்றனர்.
ஆடுஜீவிதம்: அமலா பால் நடித்த ஆடுஜீவிதம் திரைப்படம் தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த படத்தில் அமலா பால், பிரித்விரிஜின் மனைவியாக நடித்துள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம் என்ற நாவலைத் தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.சுற்றி வளைக்காமல் சொல்ல வேண்டியதை அப்படியே நேர்கோட்டில் சொல்லப்பட்ட கதை ஆடு ஜீவிதம்.


Click it and Unblock the Notifications











