கலர்புல் காம்போவில் புகைப்படங்களை வெளியிட்ட அமலா பால்.. வாழ்க்கையிலும் வண்ணங்களை சேர்க்க விருப்பமாம்

சென்னை : நடிகை அமலா பால் எப்போதுமே அதிரடி படங்களில் நடித்து சிறப்பான பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றவர்.

Recommended Video

கவர்ச்சி வேண்டுமாம் ! Amala Paul Bold Speech | Cadaver Press Meet |*Kollywood

இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் சமீபத்தில் ஓடிடியில் நேரடியாக வெளியானது கடாவர். இந்தப் படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை.

பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் அமலா பால், அதையொட்டி பல போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்தவர். இவரது அதிரடியான நடிப்பால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்தவர். குறிப்பாக தமிழின் முதல் படமான சிந்து சமவெளியிலேயே தனது அதிரடியை துவக்கியவர். இந்தப் படத்தில் தன்னுடைய மாமனாரை காதலிக்கும் கேரக்டரில் நடித்திருந்தார் அமலா பால்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

தொடர்ந்து இவர் நடித்த மைனா படம் இவரை வேறு கோணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சென்றது. அடுத்தடுத்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அமலா பால், ஒரு கட்டத்தில் இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து மணம் செய்துக் கொண்டார். நடிப்பிலிருந்தும் ஒதுங்கினார்.

அமலா பாலின் அதிரடி

அமலா பாலின் அதிரடி

ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்கள்கூட நீடிக்கவில்லை. இருவரும் இணைந்து விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தினார் அமலா பால். மீண்டும் தன்னுடைய அதிரடியை துவக்கினார். இவரது நடிப்பில் வெளியான ஆடை படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

தயாரிப்பாளரான அமலா பால்

தயாரிப்பாளரான அமலா பால்

தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் அமலா பால். இவரது தயாரிப்பில் கடந்த 2018லேயே சூட்டிங் துவங்கப்பட்ட கடாவர் படம். 4 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று பிரமோஷனின்போது கூறினார் அமலா பால்.

கலவையான விமர்சனங்கள்

கலவையான விமர்சனங்கள்

படம் ஓடிடியில் வெளியான நிலையில், கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தில் தடயவியல் நிபுணராக நடித்திருந்தார் அமலா பால். த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படம் திரைக்கதையில் சொதப்பியதால் ரசிகர்களை ஈர்க்க தவறிவிட்டது. ஆயினும் எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் தற்போது மீண்டும் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்

எப்போதும் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுபவர் அமலா பால். தொடர்ந்து கவர்ச்சிகரமான மற்றும் பிகினியில் இவரது போட்டோஷுட்கள் காணப்படும். அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கலர்புல் காம்பினேஷனில் புகைப்பட சூட் எடுத்து அதை வெளியிட்டுள்ளார்.

வாழ்க்கையில் வண்ணம்

வாழ்க்கையில் வண்ணம்

இந்த புகைப்படங்களில் மினி ஸ்கர்ட் மற்றும் டாப்புடன் காணப்படுகிறார். மேலும் தன்னுடைய தன்னுடைய சிறப்பான தருணங்களில் வண்ணங்களை சேர்க்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்சை அள்ளித் தெளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X