அமலா பாலின் மகன் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா? அப்படியே அம்மா போல குறையாத அழகு!
சென்னை: நடிகை அமலா பாலுக்கு கடந்த ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின் இணையத்தில் அவ்வப்போது கணவரோடு இருக்கும் போட்டோ, குழந்தையுடன் இருக்கும் போட்டோ என பலவற்றை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது அவர் தனது மகனின் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை அமலா பால். அந்த படத்திற்கு முன், தமிழில் அவர் ஒரு படத்தில் நடித்த போதும், சிந்து சமவெளி படம் தான் அவருக்கு நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் அமலா பால் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் பேசு பொருளானது. அதாவது, மாமனாருடன் தகாத உறவு வைத்து இருக்கும், சர்ச்சைக்குரிய ரோலில் நடித்திருந்தார். இதன் காரணமாக, பலரது கவனத்துக்கு உள்ளான அமலா பாலுக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

நடிகை அமலா பால்: சிந்து சமவெளி படத்திற்கு பின், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் கொஞ்சமும் சம்மந்தமே இல்லாமல் கண்களால் பேசி நடித்திருந்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் மூலம் நடிகர் விஜயின் தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பின் விக்ரம் , தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததார்.
மலையாள படங்களில்: சினிமாவில் பிஸியாக நடித்து வந்த அமலா பால், தலைவா பட இயக்குநர் ஏ.எல் விஜயை காதலித்து வந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் அவரையை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்தார். கடைசியில் அதுவே இவர்கள் இருவரும் பிரிவதற்கு காரணமாக அடைந்தது. பின் இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். இவர்கள் இருவரும் பிரித்ததற்கான காரணத்தை சொல்லாத நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். விவகாரத்திற்கு பின் மீண்டும் அமலா பால், ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்தார். இப்படி நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும் என அமலா பால் நினைத்து, அந்த ரோலில் நடித்தார். ஆனால், கடைசியில் அதுவே வினையாக மாறி தமிழில் அடுத்து அவருக்கு படங்களே அமையாமல் போனது. அதைத் தொடர்ந்து, பல ஆண்டுகள் கழித்து ஆடுஜீவிதம் படத்தில் பிரித்விராஜின் மனைவியாக நடித்தார். அதைத்தொடர்ந்து மலையாளம் மற்றும் இந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.
இரண்டாம் திருமணம்: இதன்பின், தனது நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறைபடி நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், ரிலீஸ் உள்ளிட்டவைகளை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்த அமலா பால், திருமண சில நாட்களிலே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால், அவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தாரா என்கிற பேச்சம் வந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்தார்.
அம்மாவை போல அழகு: குழந்தை பிறப்பிற்கு பிறகு கணவருடன் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் அமலா பால், தற்போது தனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், அமலா பாலின் மகன் நன்றாக வளர்ந்துவிட்டார் என்றும், அப்படியே அம்மா போல குறையாத அழகு என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











