Amala Paul :சம்மருக்கு நீச்சல் குளத்தை விட்டு வெளியில் வர முடியலையாம் அமலா பாலுக்கு!

சென்னை : நடிகை அமலாபால் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர்.

அடுத்ததாக மலையாளத்தில் பிரித்விராஜின் மனைவியாக இவர் நடித்துள்ள ஆடு ஜீவிதம் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார் அமலா பால்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் அமலாபால், அடுத்தடுத்த கவர்ச்சிப் போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Actress Amala paul shared swimming pool video in bikini that gets more likes

அமலா பால் பிகினி வீடியோ : நடிகை அமலாபால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிப் படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தமிழில் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அடுத்ததாக மலையாளத்தில் பிரித்விராஜ் மனைவியாக நடித்துள்ள படத்தின் ரிலீசுக்காக வெயிட்டிங்.

பட வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில், ஆடு ஜீவிதம் என்ற இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார் அமலா பால். இந்தப் படத்தில் பிரித்விராஜுடன் லிப் லாக் காட்சி ஒன்று உள்ளதாம். இந்த விஷயம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகறித்து பேசிய அமலா பால், ஆடை படத்தில் நிர்வாணமாகவே நடித்த தனக்கு, லிப் லாக் காட்சியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Actress Amala paul shared swimming pool video in bikini that gets more likes

இந்த ஆண்டில் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. பிரபல நாவலை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ளது. தேசிய விருது இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ட்ரெயிலரில் பிரித்விராஜின் நடிப்பு அனைத்து தரப்பினரையும் மிரட்டியுள்ளது.

இந்தப் படம் அமலா பாலிற்கு அதிகமான பட வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் அமலா பால் தொடர்ந்து கவர்ச்சிகரமாக போட்டோஷுட்களை அதிகமாக எடுத்து, அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். பிகினி உள்ளிட்டவற்றிலும் அமலா பாலை பார்க்க முடிகிறது. அடுத்தடுத்த புகைப்படங்களால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் லைக்ஸ்களால் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது பிகினியில் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நீச்சல் குளத்தில் மீன்குட்டியாக நீந்தும் அமலாபால், வெளியில் வந்தும், விதவிதமான போஸ்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இது பழைய வீடியோ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே ஏறக்குறைய ஒரு லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X