வவ்வால் போல் தலைகீழாக தொங்கும் அமலாபால்....புது வித யோகா பயிற்சி !
சென்னை : லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கலந்துகொள்ள சமீபத்தில் விமானத்தில் ஹைதராபாத்துக்கு பறந்து சென்றார் நடிகை அமலாபால்.
ஏற்கனவே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் இவர் எப்பொழுது சர்ச்சைக்குரிய திரைப்படத்தில் நடித்து வருவதால் இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.
தாறுமாறான புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருவதால் ட்ரெண்டிங் நாயகி என பலராலும் அழைக்கப்படும் அமலாபால் எப்பொழுது தலைகீழாக தொங்கியவாறு யோகா செய்து அசத்தியுள்ள புகைப்படம் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

அனைத்து மொழிகளிலும்
மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்கள் நடித்திருந்துவிட்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அமலாபாலுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில் அதைத் தொடர்ந்து கிடைக்கிற வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொண்டு தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடிக்க இப்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சோலோ கதாபாத்திரங்களை
தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன், பாஸ்கர் த ராஸ்கல் என தொடர் வெற்றித் திரைப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த அமலா பால் ஆடை திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து சோலோ கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் அந்த வரிசையில் "அதோ அந்த பறவை போல" படத்திலும் நடித்து வர இப்போது ரிலீஸுக்கு தயாராகி உள்ளது.

லஸ்ட் ஸ்டோரீஸ்
இந்த நிலையில் இந்தியில் முழுக்க முழுக்க அடல்ட் காட்சிகளால் உருவாக்கப்பட்ட லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் அதன் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வந்த அமலா பால் கொரானா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், இப்பொழுது மீண்டும் ஹைதராபாத்துக்கு படப்பிடிப்புக்காக பறந்து சென்று கலந்து கொண்டுள்ளார்.

தலைகீழாக யோகா
குறைவான திரைப்படங்கள் நடித்தாலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சமூக வலைதளங்களில் பல தரப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வரும் அமலாபால் இப்பொழுது துணியில் தலைகீழாக தொங்கியவாறு வித்தியாசமான யோகா செய்து அசத்தியுள்ள புகைப்படத்தை பதிவிட்டதையடுத்து செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











