கல்யாண வீடியோவை வெளியிட்ட அமலா பால்.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் அமர்க்களம்!
சென்னை: நடிகை அமலா பால் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஸ்தம்பித்து போயுள்ளனர்.
நடிகை அமலா பால் விவாகரத்துக்கு பிறகு சுதந்திர பறவையாக வலம் வருகிறார். தனது அம்மா மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார் அமலா பால்.
தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வெப் சீரிஸில் நடித்து வருகிறார் நடிகை அமலா பால்.

தம்பியின் பேச்சுலர் பார்ட்டி
இந்நிலையில் நடிகை அமலா பாலின் சகோதரரான அபிஜித் பாலுக்கு திருமணம் என கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தம்பியின் பேச்சுலர் பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார் அமலா பால்.

கையில் சரக்கு பாட்டீலுடன்..
இதில் அரைகுறை உடையில் கையில் சரக்கு பாட்டீலுடன் கெட்ட ஆட்டம் போட்டிருந்தார் அமலா பால். அதனை பார்த்த ரசிகர்கள் நல்ல வேலையாக ஏஎல் விஜய் உங்களிடமிருந்து தப்பித்து விட்டார் என கமெண்ட் பதிவிட்டனர்.

யாருக்கும் உரிமை இல்லை
இந்நிலையில் நடிகை அமலா பால் அண்மையில் தனது பிகினி போட்டோவை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார். அதனை பார்த்த ரசிகர்கள் நடிகை அமலா பாலை கடுமையாக விமர்சித்தனர். இதனால் கடுப்பான அமலா பால் நான் என்ன உடையை அணிய வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என கூறி விளாசினார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை..
இந்நிலையில் நடிகை அமலா பால் புதிய வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தனது சகோதரர் அபிஜித்தின் திருமண வீடியோதான் அது. அதில் கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் கலக்கலாக உள்ளது.

செம க்யூட் என ஜொள்ளு
திருமணத்தில் தான் நடந்தது, போனது, வந்தது, சிரித்தது, பேசியது என க்யூட் க்யூட் ரியாக்ஷன்களை எல்லாம் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அமலா பாலின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செம க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

ஏஎல் விஜய் விவகாரத்து
அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் எப்போது உங்களுக்கு திருமணம் என கேட்டு வருகின்றனர். நடிகை அமலா பால் இயக்குநர் ஏஎல் விஜய்யை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமா அடுத்த சில ஆண்டுகளிலேயே அவரை பிரிந்த அமலா பால் 2017ஆம் ஆண்டு கணவர் ஏஎல் விஜய்யை சட்டப்படி விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











