இலைகளுக்குள் ரோஜா பூ போல நிற்கும் அமலா பால்.. கவிதைகளை கொட்டும் ரசிகர்கள்!
சென்னை : நடிகையாக இருந்த நடிகை அமலாபால் இப்பொழுது காடவர் படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அமலாபால் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும்போது கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
விவகாரமான படு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வரும் அமலாபால் இப்பொழுது இலைகளுக்கு நடுவே ரோஜா பூ போல நின்று கொண்டிருக்கும் அழகான புகைப்படங்களை பார்த்து ரசிகர்களை வர்ணிக்க வைத்துள்ளார்.

ஆடையில்லாமல் நடித்து
தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அமலாபால், நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கும் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். மேயாதமான் பட இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் மிகச்சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்ற இவர் அதற்கு இணையாக சர்ச்சைகளிலும் சிக்கினார்.
Recommended Video

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும்
இதுவரை நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அமலாபால் இப்பொழுது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். அதன்படி காடவர் என்ற படத்தை தற்போது தயாரித்து நடித்து வருகிறார். திரிஷா,நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், போன்ற நடிகைகளின் வரிசையில் அமலாபாலும் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆடை வெற்றிக்குப் பிறகு ஆக்ஷன் கதை களத்தில் உருவான அதோ அந்த பறவை போல படத்தில் பல சண்டைக்காட்சிகளில் பிசிரு தட்டாமல் நடித்து முடித்துள்ளார்.

ஆந்தாலஜி திரைப்படங்களிலும் கவனம்
அனைத்து கட்ட பணிகளும் முடிந்து அதோ அந்த பறவை போல படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. மலையாளத்தில் ஆடுஜீவிதம் என்ற படத்திலும் நடித்து வரும் அமலாபால் வெப் சீரிஸ் மற்றும் ஆந்தாலஜி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இலைகளுக்கு நடுவே ரோஜா பூ போல
சமூக வலைதளங்களில் அடிக்கடி விவகாரமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கும் இவர் இப்பொழுது ஸ்லீவ்லெஸ் உடையில் இலைகளுக்கு நடுவே ரோஜா பூ போல நின்றுகொண்டுள்ள அழகான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கவிதைகளை கொட்டி வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











