Don't Miss!
- News
தேர்தல் ஆணையம் ஜனநாயக கடமையில் தவறிவிட்டது.. எங்கள் நியாயத்தை முன்வைப்போம்.. வைகைச்செல்வன் பேட்டி!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Sports
ஹர்திக் கொடுத்த பலே ஐடியா.. சதத்திற்கு நீங்க தான் காரணம்.. ஹர்திக் குறித்து சுப்மன் கில் பேச்சு
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடுவிரலை காட்டிய அமலா பால்... என்ன இதெல்லாம் விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடுவிரலை காட்டிய போட்டோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இவர் 2009 முன்னணி ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் திரையில் அறிமுகமானார் அமலா பால். பின் தமிழில் மாமனாரை காதலிக்கும் ஒரு விவகாரமான கதை களத்தைக்கொண்ட சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தார்.
முதல் படமே விவகாரமான படமாகிப்போனதால், அப்போது முதல் இப்போது வரை அம்மணி எது செய்தாலும் சர்ச்சையாகி விடுகிறது.
புது வீட்டில் பால் காய்ச்சிய ஜிபி முத்து..முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்!

நடிகை அமலா பால்
நடிகை அமலா பால் குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், சூர்யா, விஷ்ணுவிஷால் போன்ற முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்தார். விஜய்யுடன் தலைவா படத்தில் இணைந்து நடித்த போது இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா பால் பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

படவாய்ப்பு இல்லை
விவாகரத்துக்கு பின் ஆடை படத்தில் பல காட்சிகளில் ஆடை இல்லாம நடித்து சர்ச்சையில் சிக்கினார். படத்திற்காக எதையும் செய்தாலும், ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நினைத்த அமலா பாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆடை படத்திற்கு பிறகு பெரிதாக எந்த படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் புலம்பி வருகிறார்.

மலையாளப் படத்தில்
தமிழில் கடைசியாக அமலா பால் நடித்த கடாவர் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. விக்டிம் வெப்சீரிஸிலும் நடித்திருந்தார். அடுத்ததாக மலையாள படமான Dvija எனும் படத்தில் நடித்து வருகிறார் அமலா பால். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ் அண்மையில் வெளியானது. அதில்,கேரள பாரம்பரிய உடையில் குடையை கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறார்.

விளாசும் நெட்டிசன்ஸ்
நடிகை அமலாபாலுக்கு படவாய்ப்பு இல்லாததால், சோஷியல் மீடியாவே கெதியாக இருக்கும் அமலா பால், நடுவிரலை காட்டிய படி இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, இது எளிதானது என்று யாரும் சொல்லவில்லை... இவ்வளவு கடினமாக இருக்கும் என்று யாரும் சொல்லவில்லை... ஒரு வட்டத்திற்குள் வாழ்க்கை ஓடுகிறது,என் வாலை துரத்துகிறது...நான் திரும்பி வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த நெட்டிசன்ஸ் என்ன இதெல்லாம் என்று அவரை விளாசி வருகின்றனர்.