Amala paul : ஓவர் வெயிட்டு போட்ட அமலா பால்.. இருந்தாலும் அழகுதான்.. வர்ணிக்கும் பேன்ஸ்!

சென்னை: நடிகை அமலா பாலுக்கு கடந்த ஆண்டு திருமணமாகி அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அமலா பால் இலை என்று பெயர் வைத்து இருக்கிறார். குழந்தை பிறந்து ஐந்து மாதமான நிலையில், கணவருடன் ஜாலியாக டூர் அடித்து வருகிறார். தற்போது, அமலா பால் இன்ஸ்டாகிராமில் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

நடிகை அமலா பால், சிந்து சமவெளி படத்திற்கு முன் ஒரு தமிழ் படத்தில் நடித்த போதும், சிந்து சமவெளி திரைப்படம் தான் அவருக்கு நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. அந்த படத்தில் அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரம் சர்ச்சைக்குரியதாக இருந்த போது, எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதில் தைரியமாக நடித்திருந்தார்.

amala paul photos instagram

திருப்புமுனையான படம்: இதைத்தொடர்ந்து, இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் அமலா பாலுக்கு திருப்புமுனையாக அமைந்தது. முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் கொஞ்சமும் சம்மந்தமே இல்லாமல் கண்களால் பேசி நடித்திருந்தார் அமலா பால். அதன் மூலம் நடிகர் விஜயின் தலைவா படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படத்திற்கு பின் விக்ரம்,தனுஷ்,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்ததார்.

amala paul photos instagram

பட வாய்ப்பு குறைந்தது: காதல் திருமணம்: சினிமாவில் பிஸியாக நடித்து வந்த அமலா பால், இயக்குநர் ஏ.எல் விஜயை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்தனர். இதையடுத்து, இயக்குநர் ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். விவாகரத்திற்கு பின் மீண்டும் விஐபி2, அம்மாவின் கணக்கு, திருட்டு பயலே 2 போன்ற திரைப்படத்தில் நடித்துவந்தார். ஆனால், ஆடை படத்திற்கு பிறகு அமலா பாலின் மார்க்கெட் மொத்தமாக டவுன் ஆனது.

amala paul photos instagram

இரண்டாம் திருமணம்: சினிமாவில் தலைகாட்டவில்லை என்றாலும், இணையத்தில் படு ஆக்டிவாக இருந்த அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீண்ட நாள் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ரோமன் கத்தோலிக்க முறையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் அவ்வப்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்த அமலா பால், திருமணமான சில நாட்களிலேயே கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். .

amala paul photos instagram

வர்ணிக்கும் ரசிகர்கள்: இதைத்தொடர்ந்து, நடிகை அமலா பாலுக்கு ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இலை (ILAI) என பெயர் வைத்து இருக்கும் அமலா பால், தற்போது குழந்தைக்கு ஐந்து மாதமாகி இருக்கும் நிலையில், கங்காரு குட்டியை சுமப்பது போல, இடுப்பில் பெல்டை போட்டுக்கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு சுற்றுலா சென்றுள்ளார். தற்போது, இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் அமலா பால் சும்மா கும்முனு இருக்கிறார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X