முழுவதும் ஆன்மீகவாதியாக மாறிய நடிகை அமலாபால் !

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்த நடிகை அமலாபால் இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்

ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்

ஹீரோக்களுடன் டூயட் பாடி நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு சோலோவாக வலம் வரும் அமலாபால் இப்பொழுது முழு ஆன்மீகவாதியாக மாறி கோயில் கோயிலாக சுற்றி வருகிறார்.

 சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில்

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில்

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்த அமலாபாலுக்கு அடுத்ததாக வெளியான மைனா மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தது. இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வித்தார்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படம் பல விருதுகளை வாங்கிக் குவித்து மாபெரும் வெற்றி பெற்றது

 முன்னணி கதாநாயகியாக

முன்னணி கதாநாயகியாக

மைனா வெற்றியை தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிக அளவில் உருவாகத் தொடங்கின. தெலுங்கிலிருந்து இவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக இதரம்மாயில்தோ படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவிலும் கால் தடத்தை பதித்த இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளும் குவிந்து தெலுங்கு திரைப்படத்துறையிலும் முன்னணி கதாநாயகியாக ஆனார்

 கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை

தலைவா படத்தில் பணியாற்றியபோது இயக்குனர் ஏ எல் விஜய் உடன் ஏற்பட்ட காதல் பின் திருமணத்தில் சென்று முடிந்தது. திருமணம் ஆன சில வருடங்களிலேயே விவாகரத்து செய்தது கோலிவுட்டையே பரபரப்பாக்கியது. இந்த நிலையில் விவாகரத்துக்குப் பிறகு நடிகர்களுடன் ஜோடி போடும் திரைப்படங்கள் என்றாலே ஒதுக்கி வரும் அமலாபால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 ஆடை இல்லாமல் நடித்து

ஆடை இல்லாமல் நடித்து

இந்த நிலையில் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளான அமலாபாலுக்கு அதன்பிறகு வருகின்ற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களாகவே அமைகிறது. இருப்பினும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்

 ஆன்மீகவாதியாக மாறியுள்ளார்

ஆன்மீகவாதியாக மாறியுள்ளார்

வரவர கவர்ச்சிக்கு கவர்ச்சி தூக்கலாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் அமலாபால் இப்பொழுது முழுவதுமாக ஆன்மீகவாதியாக மாறியுள்ளார். வட இந்தியாவில் கவுகாத்தியில் உள்ள பிரபல துர்கா கோவிலுக்கு வழிபடச் சென்று அமலாபால் அங்கு பக்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X