மல்லாக்கப்படுத்து.. நீட்டிநெளித்து.. ஓவர் கவர்ச்சி.. வைரலாகும் அமலாபால் பிக்ஸ்!
கொச்சி : லாக் டவுனில் செம ஜாலியாக என்ஜாய் செய்து வரும் அமலாபால் இப்பொழுது பண்ணை வீட்டில் செம கவர்ச்சியான உடையில் நீட்டி நெளித்து படுத்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தை பற்ற வைத்துள்ளது.
Recommended Video
தனது ஆண் நண்பர்களுடன் கடற்கரையில் ஓடிப்பிடித்து விளையாடிய கையோடு வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இவ்வாறு சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் பல புகைப்படங்களும் வீடியோக்களும் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அமலாபால் சகஜமாக தற்பொழுது செம கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக படுத்துள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

புகழின் உச்சியில்
கேரளாவை பூர்வீகமாக கொண்ட அமலாபால், நீலதாமரா மற்றும் வீரசேகரன் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்ததை தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்திருந்த இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே வெளியாகிய நிலையில் இவரின் அடுத்த படமான மைனா இவரை புகழின் உச்சியில் தூக்கி நிறுத்தியது.

பொக்கிஷமாக
சினிமாவில் எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வலம்வந்த அமலாபாலுக்கு மைனா திரைப்படம் ஒரு பொக்கிஷமாக அமைந்த நிலையில் அதை தொடர்ந்து இவர் நடித்த பல திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என வெற்றியுடன் வலம் வர ஆரம்பித்தார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம்
விஜய், தனுஷ், அல்லு அர்ஜுன், ராம் சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அமலா பால் "ஆடை" என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வேறுவிதமான அமலாபாலை அறிமுகப்படுத்தி இருந்தார். ஆடை திரைப்படத்தை தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் தொடர்ந்து அமலா பால் நடித்து வருகிறார்.

காடவர்
தற்போது இவர் நடித்துவரும் படங்களான அதோ அந்த பறவை போல, காடவர் போன்ற திரைப்படங்கள் தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில், படப்பிடிப்புகள் கொரானா தொற்று காரணமாக தற்போது பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பண்ணை வீட்டில்
அமலாபால் சினிமாவில் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களிலும் பிஸியாக இருந்து வரும் ஒருவர், அந்த வகையில் சமீபத்தில் தனது ஆண் நண்பருடன் கவர்ச்சி உடையில் கடற்கரையில் துள்ளி குதித்து விளையாடிய வீடியோ ஒன்று செம வைரலான நிலையில், தற்பொழுது பண்ணை வீட்டில் அதே உடையில் கவர்ச்சியாக நீட்டி நெளித்து ரசிகர்களை சூடேற்றும் வகையில் செம ஹாட்டாக வெளியிட்டுள்ள இந்த போட்டோக்கள் ரசிகர்களின் ஏகபோக வர்ணிப்புடன் இணையதளத்தை கலக்கி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











