பக்தி பழமாக மாறிய அமலா பால்.. தாயாருடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம்!

சென்னை : நடிகை அமலா பால் பழனி முருகன் கோயிலில் தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நடிகை அமலா பால், நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அமலா பால்.

பின் தமிழில் மாமனாரை காதலிக்கும் ஒரு விவகாரமான கதை களத்தைக்கொண்ட சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்து தமிழிலும் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால்

அதன் பிறகு மைனா,தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி என தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்து முன்னணி நடிகை என்று பெயர் எடுத்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

விஜய்யுடன் தலைவா படத்தில் இணைந்து நடித்த போது இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அமலா பால். இரண்டு வருடத்திலேயே அவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக விவாகரத்து செய்தார். பின் தனியாக வாழ்ந்து வரும் அமலா பால், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

கை வசம் உள்ள படங்கள்

கை வசம் உள்ள படங்கள்

தமிழில் கடைசியாக அமலா பால் நடித்த கடாவர் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. விக்டிம் வெப்சீரிஸிலும் நடித்திருந்தார். நடிகை அமலா பால், Dvija, Christopher, Aadujeevitham என்ற மலையாளப்படத்திலும், Bholaa என்ற இந்திப்படம் ஒன்றிலும் கமிட்டாகி உள்ளார். தமிழில், அதோ அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே உள்ளது. அந்த படமும் சில பிரச்சனைகள் காரணமாக வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பழனி முருகன் கோயிலில்

பழனி முருகன் கோயிலில்

இந்நிலையில், நடிகை அமலா பால், தனது தாயாருடன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். பழனி முருகனை வழிபட்ட பிறகு கோயில் வளாகத்தில் அமலா பால், தனது தாய் மற்றும் தோழியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில், அமலா பால் பக்தி முத்திப்போய் நெற்றியில் விபூதி மற்றும் குங்குமத்துடன் பக்தி பழமாக காணப்பட்டார்.

கோவிலுக்குள் அனுமதி மறுப்பு

கோவிலுக்குள் அனுமதி மறுப்பு

அண்மையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக அமலா பால் சென்ற போது, கோயில் நிர்வாகிகள், அமலா பால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் சாலையில் நின்று சாமி தரிசனம் செய்யும்படி கூறியிருந்தனர். இதனால், மனவேதனை அடைந்த அமலா பால், அங்குள்ள பதிவேட்டில் 2023ம் ஆண்டில் மத பாகுபாடு நிலவுவதை பார்க்கும்போது வருத்தமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X