நடிச்ச படத்தக்கூட ரிலீஸ் பண்ண முடியல.. நெல்லை அதிசய பனிமாதா ஆலயத்தில் வழிபாடு செய்த அமலா பால்!

சென்னை: நடிகை அமலா பால் நெல்லை அதிசய பனிமாதா ஆலயத்தில் வழிபாடு செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 9 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலா பால். விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை அமலா பால்.

ஓராண்டிலேயே மீண்டும் நடிப்பு

ஓராண்டிலேயே மீண்டும் நடிப்பு

திருமணம் முடிந்த கையோடு புகுந்த வீட்டாரின் கோரிக்கைப்படி சினிமாவில் தலை காட்டாமல் இருந்த அமலா பால் அடுத்த ஓராண்டிலேயே மீண்டும் நடிக்க தொடங்கினார். இதனால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

விவாகரத்து செய்த அமலா பால்

விவாகரத்து செய்த அமலா பால்

இதனை தொடர்ந்து தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அமலா பால் கடந்த 2017ஆம் ஆண்டு தனது கணவரான இயக்குநர் ஏஎல் விஜய்யை விவாகரத்து செய்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் நடிகை அமலா பால்.

விமர்சனத்துக்கு ஆளானார் அமலா பால்

விமர்சனத்துக்கு ஆளானார் அமலா பால்

கடந்த 2019ஆம் ஆண்டு ஆடை படத்தில் நடித்தார் அமலா பால். அந்தப் படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்தார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் அமலா பால். அதனை தொடர்ந்து ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்து நீக்கப்பட்டார்.

அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல

அதோடு புதிய பட வாய்ப்புகளும் அமலா பாலுக்கு கிடைக்கவில்லை. ஏற்கனவே நடித்த அதோ அந்த பறவை போல படத்தையும் ரிலீஸ் செய்ய யாரும் முன் வராததால் அந்தப் படமும் கிடப்பிலேயே உள்ளது.

வாய்ப்பு கிடைத்தால் போதும்

வாய்ப்பு கிடைத்தால் போதும்

பட வாய்ப்புகள் இல்லாததால் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் அமலா பால். வாய்ப்பு கிடைத்தால் போதும் என எந்த கதாப்பாத்திரம் கிடைத்தாலும் நடித்து வருகிறார்.

குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி

குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் குட்டி ஸ்டோரி என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்தார் நடிகை அமலா பால். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள அமலா பால் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

தொடர் தோல்வி சரிவு

தொடர் தோல்வி சரிவு

எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி கிறங்க வைத்து வருகிறார். பர்சனல் வாழ்க்கையிலும் சரி தொழில் முறையிலும் சரி தொடர்ந்து தோல்வியையும் சரிவையும் சந்தித்து வருகிறார் அமலா பால்.

பனிமாதா கோவிலில் அமலா பால்

பனிமாதா கோவிலில் அமலா பால்

இந்நிலையில் நடிகை அமலா பால் நெல்லை அதிசய பனிமாதா கோவிலில் வழிபாடு செய்தார்.

நெல்லை வள்ளி குளம் பகுதியில் உள்ள அதிசய பனிமாதா ஆலயத்தில் 12 நாள் நடைபெறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

ஆலயத்தில் தரிசனம் செய்த அமலா பால்

ஆலயத்தில் தரிசனம் செய்த அமலா பால்

இதனை முன்னிட்டு ஆலயத்திற்கு தனது சகோதரருடன் வந்த நடிகை அமலா திருப்பலியில் கலந்துகொண்டு மாதாவை தரிசித்து சென்றார். அமலா பால் பனிமாதா ஆலயத்தில் தரிசனம் செய்த வீடியோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

ஆண் நண்பருடன் கடற்கரையில்.. ஓடி பிடித்து.. கட்டி உருண்டு.. விளையாடிய அமலா பால்.. வைரலாகும் வீடியோ!
நல்ல கதைகளை தேர்வு செய்யுங்கள்

நல்ல கதைகளை தேர்வு செய்யுங்கள்

அமலா பால் பனிமாதா ஆலயத்தில் வழிபாடு செய்யும் வீடியோவை பார்த்த ரசிகர்கள், இதற்கு பிறகாவது நல்ல கதைகளை தேர்வு செய்யுங்கள் என குறிப்பிட்டு வருகின்றனர். தமிழில் எந்த படத்திலும் கமிட்டாகாத அமலா பால் மலையாளத்தில் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எதிர்பார்ப்பில் அமலா பால்

எதிர்பார்ப்பில் அமலா பால்

இந்த படம் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர கை கொடுக்கும் என எதிர்பார்க்கிறார் அமலா பால். இந்த நேரத்தில் நெல்லை பனிமாதா ஆலயத்திற்கும் சென்று வழிபாடு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X