அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மைனா... அம்மாவே இவ்ளோ ஸ்டைலா இருக்காங்களே!

சென்னை :நடிகை அமலா பாலிற்கு மைனா படம் சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.

தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களிலும் பிசியாக காணப்படும் இவர், தற்போது தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால்

நடிகை அமலா பால் சிந்து சமவெளி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே போல்டான கேரக்டரில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து இவருக்கு தமிழில் சிறப்பான ஏற்றத்தை கொடுத்தது மைனா. இந்தப் படத்தில் தன்னுடைய அழகான கண்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை கைது செய்தார்.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்

தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து தன்னை சிறப்பான நடிகையாகவும் வெளிப்படுத்தினார். விஜய், ஆர்யா, ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்த அமலா பால், ஒரு கட்டத்தில் இயக்குநர் விஜய்யை மணமுடித்து செட்டில் ஆனார்.

விவாகரத்து முடிவு

விவாகரத்து முடிவு

ஆனால் இவர்களது திருமணம் நிலைக்கவில்லை. விஜய்யை விவாகரத்து செய்த அமலா பால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது துணிச்சலான கேரக்டருக்கு மற்றுமொரு சான்று ஆடை படம். இந்தப் படத்தில் உடம்பில் துணியில்லாமல் நடித்து அதிரடி காட்டினார்.

தயாரிப்பில் அமலா பால்

தயாரிப்பில் அமலா பால்

இந்நிலையில் தற்போது புதிய முயற்சியாக தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளில் தான் நடிக்கும் படத்தை தானே தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அவரின் இந்த புதிய முயற்சிக்கு சக நடிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தனர்.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார் அமலா பால். அவ்வப்போது புதிய வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். போட்டோஷுட்களையும் எடுத்து அந்த புகைப்படங்களையும் பகிர்கிறார். இதன்மூலம் இவரது ரசிகர்கள் இவரது வலைபக்கங்களை அதிகமாக பாலோ செய்து வருகின்றனர்.

அம்மா பிறந்தநாளுக்கு வாழ்த்து

அம்மா பிறந்தநாளுக்கு வாழ்த்து

இந்நிலையில் தற்போது தனது அம்மாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் அமலா பால். மேலும் அவருடன் தான் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் அமலா பாலுக்கு இணையாக அவரது அம்மாவும் காணப்படுகிறார்.

கலக்கல் காம்பினேஷன்

கலக்கல் காம்பினேஷன்

மாடர்ன் உடையில் இருவரும் கலக்கலாக காணப்படுகின்றனர். இதனிடையே தன்னுடைய அம்மா தன்னுடைய உலகமாகவும் தனக்கு எல்லாமாகவும் இருப்பதாக அமலா பால் கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். அவர் மிகவும் கூலானவர் என்றும் கூறியுள்ளார். இருவரும் இணைந்து சிறப்பான போஸ்களை கொடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X