ஹேர் கலரிங், ரிங் மூக்குத்தி வித்தியாசமான லுக்கில் நடிகை அமலாபால்!
சென்னை : தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால்
சமீபகாலமாகவே அதிக அளவில் சர்ச்சைகளில் சிக்கி வருவதையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்தும் நடித்து வருகிறார்.
ஆடு ஜீவிதம், காடவர், அதோ அந்த பறவை போல உள்ளிட்ட படங்களில் அமலாபால் நடித்து வர இப்பொழுது ஹேர்கலரிங் மற்றும் ரிங் மூக்குத்தி அணிந்து கொண்டு வித்தியாசமான லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

மைனாவாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில்
கொஞ்சிப் பேசும் மைனாவாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த நடிகை அமலா பால் அதைத் தொடர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற இப்பொழுது முன்னணி கதாநாயகியாக முன்னேறி உள்ளார்.

ஆடை கூட இல்லாமல் நடித்து
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்த அமலா பாலுக்கு அதைத் தொடர்ந்து சர்ச்சைகளும் பின் தொடர்கிறது.

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
ஆடை திரைப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற லஸ்ட் ஸ்டோரிஸ் தெலுங்கு ரீமேக் பிட்ட கதாலு திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

ஸ்டண்ட் காட்சிகளிலும் பிரமாதப்படுத்தி உள்ளார்
இதுவரை நடிகையாக மட்டும் இருந்த அமலாபால் தயாரிப்பாளராகவும் மாறி காடவர் என்ற படத்தை தயாரித்து வருகிறார். ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் அதோ அந்த பறவை போத முழுக்க முழுக்க காட்டுப்பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை அமலா பால் ஸ்டண்ட் காட்சிகளிலும் செய்து பிரமாதப்படுத்தி உள்ளார். சென்ற வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அதோ அந்த பறவை போல ஒரு சில காரணங்களால் இன்று வரை வெளியாகவில்லை.

ஹேர் கலரிங் ரிங் மூக்குத்தி
அமலா பால் என்றாலே சர்ச்சைக்குப் பெயர் போனவர் என்று சொல்லும் அளவிற்கு இவர் சமூக வலைதளங்களிலும் திரைப்படங்களிலும் செய்யும் விஷயங்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாறி இருக்க முன்பு இருந்ததை விடவும் அப்போது அதிக கவர்ச்சியாக சமூக வலைதளங்களில் வலம் வருகிறார். இந்த நிலையில் இப்பொழுது ஹேர் கலரிங் செய்து கொண்டு ரிங் மூக்குத்தி அணிந்த படி வித்தியாசமான லுக்கில் உள்ள அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது


Click it and Unblock the Notifications











