கண்ணைப் பறிக்கும் ரெட்ரோ ஸ்டைலில் அசத்தும் நடிகை அமலாபால்!

சென்னை : கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை அமலா பால்

ஆடை வெற்றியைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, காடவர், ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்களில் அமலாபால் தற்போது நடித்து வருகிறார்

சமூக வலைதளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இப்பொழுது ரெட்ரோ ஸ்டைலில் கலக்கும் சூப்பர் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகின்றன

 நேச்சுரலான நடிப்பு

நேச்சுரலான நடிப்பு

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அமலாபால். மைனா திரை படத்தில் மிகவும் நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அமலாபாலுக்கு அடுத்தடுத்து தமிழில் பல வாய்ப்புகள் குவிந்தன. யதார்த்தமான நடிப்பு மேக்கப் இல்லாத அழகு என காண்போர் அனைவரையும் முதல் படத்திலேயே கவர்ந்த அமலாபால் இப்பொழுது தென்னிந்தியாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். அல்லு அர்ஜுன்,ஆர்யா, தனுஷ் ,விஜய் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவருக்கு தெலுங்கு திரைப்படத் துறையும் பெருமளவு கைகொடுக்கிறது.

 ஆடை இல்லாமல் நடித்தது

ஆடை இல்லாமல் நடித்தது

கீர்த்தி சுரேஷ்,நயன்தாரா,த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளை தொடர்ந்து அமலாபாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் மேயாதமான் பட இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது தமிழ் சினிமாவில் எந்த ஒரு நடிகையும் முயற்சி செய்யாத ரோலை அமலாபால் ஆடை படத்தில் செய்து காட்டி இருப்பார். ஆடை படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்தது பார்க்கும் அனைவரையும் அசர வைத்த அமலாபால் அதற்காக பல விருதுகளையும் அள்ளினார்

 லீட் ரோலில்

லீட் ரோலில்

ஆடை கொடுத்த மிகப்பெரிய உந்துதலை தொடர்ந்து இப்பொழுது தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் முழுக்க முழுக்க காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட அதோ அந்த பறவை போல என்ற படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சண்டை காட்சிகளிலும் நடித்து பிரமாத படுத்தி உள்ளார். இப்படம் அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து மிக விரைவிலேயே ரிலீஸுக்கு காத்துக் கொண்டுள்ளது

 ரெட்ரோ ஸ்டைலில் விதவிதமான

ரெட்ரோ ஸ்டைலில் விதவிதமான

நடிப்பைத் தொடர்ந்து தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அமலாபால் இப்பொழுது காடவர் என்ற படத்தை தயாரித்து வருகிறார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகிவரும் காடவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கும் அமலாபால் இப்பொழுது கண்ணைப் பறிக்கும் ரெட்ரோ ஸ்டைலில் அசத்தும் விதவிதமான புகைப்படங்கள் இணையதளத்தை கலக்குகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X