Ambika: NO என்றால் NO தான்.. நடிகைகள் தயக்கம் இல்லாமல் சொல்லுங்கள்.. அம்பிகா பளிச்
சென்னை: நடிகை அம்பிகா தமிழ் சினிமாவில் 80களின் இறுதியில் தொடங்கி 90களின் தொடக்கத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். இப்போதும் அவ்வப்போது தனது மனதைக் கவரும் கதைக்களில் மட்டும் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகளுக்கும் இளைய தலைமுறையினருக்கும் சில அறிவுரைகளை கூறியுள்ளார்.
கலாட்டா தமிழ் யூட்யூப் சேனலுக்கு நடிகை அம்பிகா அளித்த பேட்டியில், நடிகைகள் சினிமா துறையில் எதிர்கொள்ளும் தர்ம சங்கடமான விஷயங்கள் குறித்து தைரியமாக வெளியே சொல்லுங்கள் எனக் கூறுகிறார். அதாவது, "திரைத்துறையில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் தங்களுக்கு ஏற்படும் அநீதிகள் குறித்து தைரியமாக வெளியே சொல்லுங்கள். முதலில் நீங்கள் பேசுங்கள். நீங்கள் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லிவிடுங்கள். அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ, நீங்கள் சொல்லிவிட்டீர்கள் அல்லவா, அதன் பின்னர் உங்கள் மனது கொஞ்சம் அமைதி ஆகிவிடும்.
இப்போது, சொல்ல வேண்டியதை சொல்லியாகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதாவது நான் உங்களிடம் ஒரு விஷயம் சொல்கிறேன். அதற்கு நான் நினைப்பதைப் போல நீங்கள் ரியாக்ட் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. நீங்கள் என்னிடம் ஏதாவது கூறுகிறீர்கள் என்றால், அப்படியா? என்ன ஆச்சு? என்றும் கேட்கலாம், போதும் போதும், நீ சொன்னதை எல்லாம் நாங்க நம்பீட்டோம் என சலிப்பாக கூறுபவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுங்கள். அதை நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும். அதற்கு என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

NO Means NO: என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயத்தில் நான் கூறுவது, ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், குறிப்பாக மாணவப் பருவத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு No என்ற வார்த்தை ஏற்றுக் கொள்ள பழகுங்கள். ஒருவர் No என்று கூறினால், அதை நீங்கள் No என்று ஒத்துக் கொள்ளுங்கள். இது ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி என்று கூறினார். அந்த பேட்டியில் அவரது மகன்கள் குறித்தும் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
மகன்கள்: அதாவது, நான் எனது மகன்களை மிஸ் செய்கிறேன். எனது மூத்த மகனுக்கும் இளைய மகனுக்கு ரொம்பவுமே வித்தியாசங்கள் உள்ளது. மூத்த மகனைப் பொறுத்தவரையில் அவர் ஒரு கண்டிப்பான அப்பாவைப் போல இருப்பார். எனக்கு பீட்சா பிடிக்கும் என்றால் ஒரு பீஸ்க்கு மேல் சாப்பிட விடமாட்டார். அதேபோல் இளைய மகன் ரொம்பவும் ஜாலியான டைப். உனக்கு பீட்சா பிடிக்கும் அல்லவா, 2,3 பீஸ்கள் எடுத்து சாப்பிடு எனக் கூறுவார்.
இரண்டுமே அன்புதான்: இருவரும் அன்பைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். மூத்தவனுக்கு நான் அதிகம் சாப்பிட்டு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டால் என்ன செய்வது, சிரமப்பட வேண்டும் என்ற அக்கறை, இளையவனுக்கு ஜாலியா இரு, நடப்பதை பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிச்சல். இரண்டுமே அன்புதான். எனது மகன்களை நான் ரொம்பவும் மிஸ் செய்கிறேன்" என்று பேசினார். அம்பிகாவின் இந்த பேட்டியும் அதில் அவர் தெரிவித்த கருத்துகளும் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











