விஜய் பட நடிகை வெளியிட்டுள்ள கவர்ச்சி வீடியோ.. வெடவெடத்துப் போன ரசிகர்கள் !!

சென்னை : ஹிந்தியில் ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமீஷா பட்டேல்.

தமிழில் விஜய்யுடன் இணைந்து புதிய கீதை திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் தெலுங்கு மொழியிலும் கால் பதித்து பல படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சிக்கு என்றுமே கட்டுப்பாடு விதிக்காத அமீஷா பட்டேல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிப் டாப் கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் வெடவெடக்கச் செய்துள்ளது.

நடிக்க விருப்பமில்லை

நடிக்க விருப்பமில்லை

இந்தி சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டாராகவும் இன்று வரை பல பெண்களின் கனவுக் கண்ணனாகவும் வலம் வரும் ரித்திக் ரோஷன் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்ட "கஹோ நா பியார் ஹை" என்ற படம் அமீஷா பட்டேலுக்கும் அறிமுகப்படமாக அமைந்தது. பள்ளி படித்துக் கொண்டிருந்த அமீஷா தனது உறவினரின் பரிந்துரையின் பெயரில் கஹோ நா பியார் ஹை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அமிர்ஷா தான் மேற்படிப்பு படிக்க வேண்டும் எனக்கு படங்களில் நடிக்க விருப்பமில்லை என தட்டிக்கழிக்க இந்த படத்தில் கரீனா கபூர் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பு சென்ற பின் கரீனா கபூரும் ஒரு சில காரணங்களால் நடிக்கவில்லை.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

மீண்டும் அமீஷாவிடம் அணுகிய போது இந்த முறை ஒப்புக்கொண்டு கஹோ நா பியார் ஹை படத்தில் கதாநாயகியாக முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டார். அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து கொண்டிருந்த ரித்திக் ரோஷனும் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இரு வேடங்களில்

இரு வேடங்களில்

இரு புதுமுகங்களும் அறிமுகமான இந்த படம் ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாகி மிகப்பெரிய வெற்றியடைந்து வசூல் சாதனை புரிந்தது. ரித்திக் ரோஷன் இந்த படத்தில் ரோஹித் மற்றும் ராஜ் என இரு வேடங்களில் நடித்து அனைவரையும் அசர வைத்த நிலையில் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்தையும் பெற்றார். அதே போன்று அமீஷாவும் இந்த படத்திற்கு பின் மிகப் பெரிய நடிகையாக வலம் வர தொடங்கினார்.

புதிய கீதை திரைப்படத்தில்

புதிய கீதை திரைப்படத்தில்

பாலிவுட் துறையில் கலக்கி வந்த அமீஷா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் முதன்முறையாக விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானார்.

அமீஷா படேல் தெலுங்கிலும் அதிரடியாக

அமீஷா படேல் தெலுங்கிலும் அதிரடியாக

தமிழில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான நியூ திரைப்படம் தெலுங்கில் நானி எனப் பெயரிடப்பட்டு அதில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க அமீஷா படேல் தனது அறிமுகத்தை தெலுங்கிலும் அதிரடியாக கொடுத்து தெலுங்கு ரசிகர்களுக்கும் பரிச்சயமாகி பின் பாலகிருஷ்ணாவுடன் நரசிம்மடு உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஜொள்ளு விட வைத்து

ஜொள்ளு விட வைத்து

ஹிந்தி திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம்வரும் அமீஷா ரசிகர்களை தனது படங்களின் மூலம் ரசிக்க வைத்து வந்த நிலையில் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி பொங்க வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அனைவரையும் ஜொள்ளு விட வைத்துள்ளது.

மயக்கும் எக்ஸ்பிரஷனுடன்

மயக்கும் எக்ஸ்பிரஷனுடன்

வெள்ளை நிற முண்டா பனியனுடன் குட்டி ட்ரவுசர் அணிந்து கொண்டு தனது முன்னழகு உட்பட பளபளவென இருக்கும் மொத்த உடல் அழகையும் காட்டியவாறு மயக்கும் எக்ஸ்பிரஷனுடன் மேக்கப் அறையில் இருந்து கொண்டு வெளியிட்டுள்ள இந்த கட்டுக்கடங்காத கவர்ச்சி வீடியோ தற்பொழுது ரசிகர்களை வெடவெடக்க வைத்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X