பாத் டப்பில் பிகில் பட நடிகை… போஸ் கொடுக்க இது நல்ல இடம்!
சென்னை :தளபதி விஜய்யின் பிகில் படத்தில் தென்றல் என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் அமிர்தா ஐயர்.
இவர் கவினுடன் லிப்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தாயாராக உள்ளது.
தற்போது இவர் பாத் டப்பில் அமர்ந்து ஒரு கிளாஸா போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாடல் அழகி
கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்த இவர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அமிர்தா ஒரு மாடல் ஆழகிஆனார். கமல் பிரகாஷ் இயக்கத்தில் கோமாளி படம் இயக்குகர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைத்து ஹைவே காதலி எனும் ஓர் குறும்படத்தில் நடித்துள்ளார்.இக்குறும்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கதாநாயகியாக
அமிர்தா சினிமாவில் தன்னுடைய தொடக்க காலங்களில் தெறி, லிங்கா, போக்கிரி ராஜா, தெனாலி ராமன் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அதன் பின் பாரதிராஜா இயக்கத்தில் படைவீரன் படத்தில் தன்னுடைய அடையாளத்தை இன்னும் ஆழமாக பதித்துள்ளார். இப்படத்திற்கு அமிர்தாவிற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் கிடைத்தது.
Recommended Video

திரில்லர் மூவி
பிக் பாஸ் கவின் நடிப்பில் உருவாகி உள்ள லிப்ட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் அமிர்தா. இத்திரைப்படம் ஒரு திரில்லர் திரைப்படமாகும் இத்திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மேலும், எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவான வணக்கம் டா மாப்பிளை திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பாத் டப்
பேஸ் புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் ஆட்டிவாக இருக்கும் அமிர்தா ஐயர் அவ்வப்போது புகைப்படத்தை அப்லோடு செய்து வருகிறார். தற்போது, பாத் டப்பில் அமர்ந்து கிளாஸா போஸ் கொடுத்துள்ளார். மேலும், போஸ் கொடுக்க இது நல்ல இடம் என்று நினைத்தேன் என்று கேப்ஷனையும் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











