Amy Jackson: பனிபடர்ந்த சூழலில் காதல் பிரபோஸல்.. நடிகரின் காதலை உறுதி செய்த எமி ஜாக்சன்!

சென்னை: நடிகை எமி ஜாக்சன் மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து ரஜினிகாந்த், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் நடிப்பில் சமீபத்தில் மிஷன் சாப்டர் 1 படம் வெளியாகியுள்ளது. அருண் விஜய் லீட் கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் எமி ஜாக்சனும் நடித்திருந்தார். நீண்ட காலங்களுக்கு பிறகு தமிழில் எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான இந்தப் படம் அவருக்கு அதிகமான பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க இந்தப் படம் வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டில் ஜார்ஜ் பனாயிடோவுடன் எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் நடைபெறவிருந்த நிலையில் அதே ஆண்டில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் திருமணம் நடைபெறும் முன்னதாகவே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டிலிருந்து ஹாலிவுட் நடிகர் எட் பீட்டர் வெஸ்ட்விக்குடன் எமி ஜாக்சன் டேட்டிங் செய்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அடுத்த ஆண்டில் இருவரும் தங்களது காதலை உறுதி செய்தனர். இந்நிலையில் தற்போது இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

Actress Amy Jackson accepts the love proposal of Actor Ed westwick and engaged

நடிகை எமி ஜாக்சன்: நடிகை எமி ஜாக்சன், மதராசப்பட்டிணம் என்ற படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், உதயநிதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ள எமி ஜாக்சன், இந்தியிலும் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் 2.O படத்தை தொடர்ந்து இவரது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் பொங்கலையொட்டி கடந்த 12ம் தேதி அருண் விஜய்யுடன் எமி ஜாக்சன் நடித்து மிஷன் சாப்டர் 1 படம் வெளியானது. இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றுள்ள நிலையில் எமி ஜாக்சனுக்கும் சிறப்பான ரீ என்ட்ரியை கொடுத்துள்ளது.

எட் வெஸ்ட்விக்குடன் காதல்: கடந்த 2019ம் ஆண்டில் ஜார்ஜ் பனாயிடோ என்பவருடன் எமி ஜாக்சனுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், அதே ஆண்டில் ஆண் குழந்தைக்கு தாயானார். இவர்களின் திருமணம் நடக்கவிருந்த நிலையில் முன்னதாகவே கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்தனர். தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டிலிருந்து ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் எமி ஜாக்சன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து வாய் திறக்காத எமி ஜாக்சன், அடுத்த ஆண்டில் வெஸ்ட்விக்குடன் தன்னுடைய காதலை உறுதி செய்தார். இவர்களது திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

Actress Amy Jackson accepts the love proposal of Actor Ed westwick and engaged

காதல் பிரபோஸல்: இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த நடிகர் எட் ஸ்விட்சர்லாந்தின் பனிபடர்ந்த சூழலில் எமியிடம் தன்னுடைய காதலை ப்ரபோஸ் செய்துள்ளார். தொடர்ந்து அவரது காதலை உறுதி செய்த எமி, அவர் கொடுத்த நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்துக் கொண்டார். இதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார். அவரது இந்த பதிவிற்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தொடர்ந்து ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவர்களது திருமணம் குறித்து எமி ஜாக்சன் எதையும் கூறவில்லை.

Actress Amy Jackson accepts the love proposal of Actor Ed westwick and engaged

குவியும் வாழ்த்துக்கள்: இதனிடையே, இந்தப் பதிவை எமி ஜாக்சன் வெளியிட்ட ஒருமணிநேரத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தங்களது வாழ்த்துக்களை கமெண்ட்ஸ் மூலமும் லைக்ஸ் மூலம் தெரிவித்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் எமி ஜாக்சன், அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்துவரும் எமி, தன்னுடைய மகன் மற்றும் காதலனுடனான புகைப்படங்களையும் தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 13.5 மில்லயன் பேர் ஃபாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X