Don't Miss!
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- News
ரயில்வேக்கு மொத்தமாக அள்ளிக் கொடுத்த நிர்மலா.. 2013-14 பட்ஜெட்டை விட 9 மடங்கு அதிக ஒதுக்கீடு
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Lifestyle
Budget 2023: இந்த ஆண்டு சிவப்பு நிற கைத்தறி புடவையில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள்... எமி ஜாக்ஸன் ஷேர் செய்த க்யூட் பிக்.. கொண்டாடும் ரசிகாஸ்!
சென்னை: நடிகை எமி ஜாக்ஸன் தனது மகனின் பிறந்த நாளை முன்னிட்டு ஷேர் செய்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை எமி ஜாக்ஸன் இங்கிலாந்தை பூர்விகமாக கொண்டவர். பிரபல மாடல் அழகியாக வலம் வந்த எமி ஜாக்ஸன், மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
உடம்பு
முழுவதும்
காயம்..
கெத்தாக
வெளியான
அரவிந்த்
சாமியின்
இந்தப் படத்தில் துரையம்மா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார் எமி ஜாக்ஸன். முதல் படத்திலேயே கொள்ளை அழகில் மொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டிப்போட்டார் எமி ஜாக்ஸன்.

தெலுங்கில் ராம் சரணுடன்
அதனை தொடர்ந்து பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த எமி ஜாக்ஸன், ஏக் தீவானா தா என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தெலுங்கிலும் கால் பதித்தார் எமி ஜாக்ஸன். தெலுங்கில் எவடு என்ற படத்தில் ராம் சரணுடன் நடித்தார் எமி ஜாக்ஸன்.

கோலிவுட்டில் அதிக படம்
பாலிவுட் டோலிவுட் என பிஸியாக இருந்தாலும் எமி ஜாக்ஸன், கோலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். விக்ரமுடன் தாண்டவம் படத்தில் நடித்த எமி ஜாக்ஸன், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படத்திலும் நடித்தார்.

எந்த படமும் வெளியாகவில்லை
மேலும் தனுஷுடன் தங்க மகன், உதயநிதி ஸ்டாலினுடன் கெத்து, விஜய்யுடன் தெறி ஆகிய படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் 2.0 படத்தில் நடித்தார் எமி ஜாக்ஸன். இந்த படத்தில் ரோபோவாக நடித்திருந்தார் எமி. அதன் பிறகு அவரது நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

தொழில் அதிபரின் மகன்
இந்நிலையில் ஜார்ஜ் பனயிட்டோ (George Panayiotou) என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார். 2015ஆம் ஆண்டு முதல் ஜார்ஜுடன் டேட்டிங்கில் இருந்தார் எமி ஜாக்ஸன். இவர், இங்கிலாந்து தொழிலதிபர் ஆண்ட்ரீஸ் பனயிட்டோவின் மகன் ஆவார். இவர்களுக்கு பல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்
திருமணத்திற்கு முன்பே காதலரால் கர்ப்பமானார் எமி ஜாக்ஸன். அவருக்கு 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதனைத் தொடர்ந்து ஜார்ஜ் ஏமி ஜாக்சன் இருவரும் இத்தாலியில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணம் தள்ளி வைக்கப்பட்டது.

மகனுக்கு இரண்டாவது பிறந்தநாள்
அதன் பிறகு தனது காதலரின் போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் இருந்து நீக்கினார் எமி ஜாக்ஸன். இதனால் காதலரை பிரிகிறாரா எமி என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் எமி ஜாக்ஸன். இதனை முன்னிட்டு பிறந்த குழந்தையின் போட்டோ மற்றும் தனது மகனுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் எமி ஜாக்ஸன்.

உன் அம்மாவாக இருப்பது அதிர்ஷ்டம்
மேலும் அந்த போட்டோவுக்கு இன்று நீங்கள் இரண்டாவது வயதை அடைந்துள்ளீர்கள் என் அழகான ஆண் குழந்தையே. நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்தவன் மற்றும் உன் அம்மாவாக நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 2வது பிறந்தநாள் வாழ்த்துக்கள், சூரிய ஒளி மற்றும் மகிழ்ச்சியின் சிறிய கலங்கரை விளக்கமாக, நீங்கள் நம்பமுடியாத சிறிய மனிதனாக வளர்கிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

கட்டிப்பிடித்து மார்போடு அணைத்து
முன்னதாக நடிகை எமி ஜாக்ஸன் தனது மகனுடன் சிறப்பான நாளுக்காக மதிய உணவின் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டார். படங்களில், எமி தனது சிறிய குழந்தையை அன்போடும் பாசத்தோடும் கட்டிப்பிடித்து மார்போடு அணைத்துள்ளார். இந்த போட்டோக்கள் இன்ஸ்டாவில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.