குழந்தையுடன் வந்த எமி ஜாக்சன்.. காதலனுடன் நடந்த நிச்சயதார்த்தம்.. லண்டனில் தடபுடல் விருந்து!

சென்னை: தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்த, நடிகை எமி ஜாக்சனுக்கு லண்டனில், கடந்த சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான போட்டோஸ் தற்போது சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இதில், நடிகை எமி ஜாக்சன் தனது குழந்தையுடன் கலந்து கொண்டு மோதிரம் மாற்றி உள்ளார்.

ஏ.எல் விஜய் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் மதராசபட்டினம். இப்படத்தில், ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார் எமி ஜாக்சன், அந்த படத்தில் இங்கிலாந்து ராணி போல சும்மா அம்சமாக இருப்பார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியை பெற்று, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

actress amy jackson engagement photos trending on social media

மதராசப்பட்டினம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஐ, தாண்டவம், கெத்து, 2.0, தங்க மகன், தெறி, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்திருந்தார். அண்மையில் இவர் அருண் விஜய்யுடன் இணைந்து மிஷன் படத்தில் நடித்திருந்தார். தியேட்டரில் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

காதலரை பிரிந்தார்: ஜார்ஜ் என்ற தொழிலதிபருடன் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை எமி ஜாக்சன், திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டார். பின் காதலருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். காதலரை பிரிந்து தனியாக வசித்து வந்த எமி ஜாக்சன், குழந்தையோடு இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து வந்த நிலையில், பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த இரண்டு ஆண்டாக அவரை எமி, காதலித்து வருகிறார்.

actress amy jackson engagement photos trending on social media

நிச்சயதார்த்தம்: இந்நிலையில், எமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் எட் வெஸ்ட்விக்கும் கடந்த 21ந் தேதி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தடபுடலான விருந்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில், இரண்டு குடும்பத்தை சார்ந்த நண்பர்களும், உறவினர்களும் கலந்து கொண்டனர். இதில் எமி ஜாக்சன் தனது மகனுடன் கலந்து மோதிரத்தை மாற்றிக் கொண்டார். இவர்களின் நிச்சயதார்த்த போட்டோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் எமி ஜாக்சனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X