திருமணத்திற்கு முன்பே குழந்தை.. தாய்ப்பால் ஊட்டிய படியே மகன் போட்டோவை வெளியிட்ட ரஜினி ஹீரோயின்

நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Recommended Video

Amy Jackson Blessed with Baby Boy | நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

சென்னை: நடிகை எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த மாடலான அவர், தொடர்ந்து சில படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தார். கடைசியாக தமிழில் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் இங்கிலாந்து பறந்த எமி, அங்கு தனது காதலருடன் வாழ்ந்து வருகிறார். சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளம் மூலம் எல்லோருக்கும் தெரியப்படுத்தினார் எமி ஜாக்சன்.

பதிவுகள்

பதிவுகள்

தனது கர்ப்பகாலத்தை முழுவதும் சந்தோஷமாக அனுபவிக்க முடிவு செய்தார். இதனால் அவர் நடிப்புக்கு ஓய்வு கொடுத்துவிட்டு மகப்பேறு தொடர்பான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தனது சமூகவலைதளப் பக்கம் வாயிலாக அவ்வப்போது, தனது தாய்மை மற்றும் கர்ப்பம் தொடர்பான பதிவுகளை எமி வெளியிட்டார்.

வளைகாப்பு

வளைகாப்பு

கர்ப்பமாக இருக்கும் போது என்ன மாதிரியான உடற்பயிற்சிகளைச் செய்யலாம் எனவும் அவர் கர்ப்பிணிகளுக்கு அறிவுரை கூறி வந்தார். சமீபத்தில் அவருக்கு நம்மூரில் வளைகாப்பு எனச் சொல்லப்படும் பேபி ஷவர் விழா நடைபெற்றது. அப்போது ‘தனக்கு ஆண் குழந்தை' பிறக்கப் போவதாக மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார். அந்த வீடியோ வைரலானது.

குழந்தையுடன் எமி

குழந்தையுடன் எமி

இந்நிலையில் எமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப்படி காதலர் இருக்கும் போட்டோவை எமி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் எமியின் காதலர் அவரது நெற்றியில் முத்தம் கொடுக்கிறார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

எபியின் இந்த போட்டோவை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் எமிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். ராய் லட்சுமி உள்ளிட்ட சக நடிகைகளும் எமிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். எமியின் இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

திருமண அறிவிப்பு

திருமண அறிவிப்பு

எமியும் அவரது காதலரும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தை பிறந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்துள்ளனர். எனவே கூடிய சீக்கிரம் எமியின் திருமண அறிவிப்பு, குழந்தையின் பெயர் உள்ளிட்ட அப்டேட்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X