எமி ஜாக்சனுக்கு 2வது கல்யாணம்.. காதலர் மடியில் அமர்ந்து உதட்டுலயே ’பசக்’.. ரொமான்ஸ் தூக்கலா இருக்கே!

லண்டன்: தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் தமிழ் சினிமாவுக்கே பெருமை தேடித்தந்த படங்களில் ஒன்று மதாராசப்பட்டினம். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் அதன் பின்னர் ஷங்கர் போன்ற பிரமாண்டமான இயக்குநர்களின் படங்களில் நடித்திருந்தாலும், மதாராசப்பட்டினம் படம் எமி ஜாக்சனை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமாக காட்டியது. எமி ஜாக்சனின் முதல் கணவருடன் விவாகரத்து ஏற்பட்டதில் இருந்து நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் டேட்டிங்கில் இருக்கின்றார் எனக் கூறபட்டது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எமி ஜாக்சன், ஜார்ஜ் பன்னாயுட்டு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு அவருடன் வாழ்ந்த நிலையில், சினிமாவுக்கு சின்ன பிரேக் விட்டிருந்தார். இவர்களுக்கு குழந்தையும் பிறந்த நிலையில், தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டு அவரை விட்டு விட்டு சென்றார். அதன் பின்னர் தற்போது இங்கிலாந்து நடிகர் எட்வெஸ்ட் விக்குடன் டேட்டிங்கில் இருந்தார். இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். குறிப்பாக நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள், மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், இருவரும் லிப் லாக் முத்தம் கொடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் என பல புகைப்படங்களை பகிர்ந்து பலரையும் கடுப்பாக்கி வருகின்றார் என்றே கூறலாம்.

Amy Jackson

லண்டன் நடிகை: இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தாண்டவம், தெறி, ஐ, தங்கமகன், கெத்து, 2.0 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டுவை பார்ட்னர் ஆக்கி குடும்ப வாழ்வில் செட்டில் ஆனார். ஜார்ஜ் மற்றும் எமி ஜாக்சன் இருவரும் படு ஜாலியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

Amy Jackson

பிரிவு: இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க எமி ஜாக்சன் ஆர்வம் காட்டி வந்த நிலையில், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்டது. இது மட்டும் இல்லாமல் எமி ஜாக்சனுக்கு, காஸிப் கேர்ள், வைட் கோல்ட், ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட பல படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வரும் நடிகர் எட்வெஸ்ட் விக் உடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாகத்தான் ஜார்ஜை விட்டு அவர் பிரிந்தார் என்றும் கூறுகின்றனர்.

Amy Jackson

இரவு பார்ட்டி: இருவரும் லண்டனில் உள்ள பப்களுக்கு அடிக்கடி இரவு நேர பார்ட்டிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இவ்வளவு காலம் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்யவுள்ளார். இதற்காக தனது இரண்டு குடும்பத்தினருடனும் பிரைவேட் ஜெட்டில் லண்டனில் இருந்து பயணப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Amy Jackson

லிப் லாக் முத்தம்: அதில் தனது காதலர் எட்வெஸ்ட் விக்கின் மடியில் அமர்ந்துகொண்டு அவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படமும், கையில் ஒரு க்ளாஸ் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் தனது மகனுடன் மகிழ்ச்சியாக விளையாடும் புகைப்படமும், குடும்பத்தினருடனும் ஜெட்டை இயக்கும் விமானிகளுடனும் இருக்கும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில், திருமணம் செய்து கொள்ளலாம் எட்வெஸ்ட் விக் என அவரையும் டேக் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X