கிளாமர் எல்லாம் ஓகே... இது என்ன சங்கி மங்கி கொண்டையா… தனுஷ் பட நடிகையை கலாய்த்த ரசிகர்கள்!
மும்பை: தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அமிரா தஸ்தூர் இப்பொழுது வித்தியாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த திரைப்படமாக உருவாகிவரும் பஹீராவில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் இவர்.
நடித்த சில திரைப்படங்களிலேயே பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ள இவர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு காட்டியவாறு கட்டி இழுக்கும் கவர்ச்சியுடன் மண்டை மேலே கொண்டையுடன் காட்சியளிக்கும் வித்தியாசமான புகைப்படம் வைரலாகி வருகிறது.

இளம் நாயகி
இந்தியில் மிகப்பெரிய வெற்றிபெற்ற பிரபலமான பல திரைப்படங்களில் நடித்து இளம் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை அமிரா தஸ்தூர் தமிழிலும் பிரபலமாகவே உள்ளார்.

மாறுபட்ட நடிப்பில்
தனுஷ், கே வி ஆனந்த் கூட்டணியில் உருவான அனேகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட அமிரா தஸ்தூர் இப்பொழுது காதலைத் தேடி நித்யானந்தா மற்றும் பிரபு தேவா-வின் மாறுபட்ட நடிப்பில் உருவாகிவரும் பஹிரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மிரட்டும் போஸ்டர்
திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் பஹிரா திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டும் வகையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்த நிலையில் இந்தத் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான புகைப்படமும்
கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழில் நடித்து வரும் அமிரா தஸ்தூருக்கு இன்றும் ரசிகர்கள் கூட்டம்‘ சற்றும் குறையாமல் இருந்து வரும் நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் பல வைரலாகி வருவதை தொடர்ந்து இப்பொழுது வெளியிட்டுள்ள வித்தியாசமான புகைப்படமும் பலரையும் கவர்ந்துள்ளது.

மண்ட மேல கொண்ட
சிகப்பு நிற ஹாட்டான உடையில் முன்னழகை காட்டியவாறு ஒரு கையில் பெட்டியுடன் கொள்ளைக் கொள்ளும் காந்தப் பார்வை பார்த்துக்கொண்டு செம கிளாமரில் போஸ் கொடுத்திருக்க, மண்டை மேலே பந்து போல மற்றொரு கொண்டை போட்டு இருக்கும் இந்த வித்யாசமான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், சிலர் கிளாமர் எல்லாம் ஓகே அது என்ன மண்ட மேல ஒரு கொண்ட என கலாய்த்தும் வர ஒருசிலர் இது என்ன சங்கி மங்கி கொண்டையா என வேடிக்கையாக கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











