நடுக்கடலில் பிகினியில் ஹாட் போஸ் கொடுத்த தனுஷ் பட நடிகை!
சென்னை : இயக்குனர் கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.
நீண்ட காலமாக தமிழில் நடிக்காமல் இருந்த இவர் இப்பொழுது பிரபுதேவாவுடன் இணைந்து பஹீரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை வேற லெவல் வைரலாக இப்பொழுது நடுக்கடலில் பிகினியில் நின்றுகொண்டு அட்டகாசமாக போஸ் கொடுத்து புகைப்படம் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

முன் ஜென்மத்தை
தமிழ் சினிமாவை வேறு கோணத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குனர் கே வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த அனேகன் திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியானது. நிகழ்காலத்தையும் முன் ஜென்மத்தையும் மிக வித்தியாசமான முறையில் கூறியிருந்த அனேகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை அமைரா தஸ்தூர் நடித்து தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார்

பிரபுதேவா சைக்கோவாக நடித்துள்ள
தமிழ் அவ்வளவாக தெரியாது என்றாலும் முதல் படத்திலேயே மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அமைரா தஸ்தூர் அடுத்தடுத்து தமிழில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையாததால் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கியுள்ளார் அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா சைக்கோவாக நடித்துள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்

சைக்கோ திரில்லர் கதை களத்தில்
முற்றிலும் வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதை களத்தில் அமைரா தஸ்தூர் உட்பட 8 கதாநாயகிகள் நடித்துள்ள பஹீரா பெரும் எதிர்பார்ப்பில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. பஹீராவை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் காதலைத் தேடி நித்யா நந்தா என்ற மற்றும் ஒரு திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அமைரா தஸ்தூர் நடிக்க உள்ளார்
Recommended Video

நடுகடலில் பிகினியில் தாராளமாக கவர்ச்சி
தமிழில் விரல்விட்டு எண்ணக்கூடிய சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாகி போன அமைரா தஸ்தூர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவை அடிக்கடி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை கொதிக்கவிடும் இவர் இப்பொழுது நடுகடலில் பிகினியில் மேலே கொசு வலை போல ட்ரான்ஸ்பரன்ட் உடையை அணிந்துகொண்டு வெயிலுக்கு இதமாக தொப்பி போட்டுக் கொண்டு தாராளமாக கவர்ச்சி காட்டி உள்ள பிகினி புகைப்படம் இப்போது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











