ஊதா கலர் உங்களுக்கு மட்டும்தான் நச்சுனு இருக்கு.. அனேகன் ஹீரோயினை ஆரவாரமாக வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: ஊதா கலர் உங்களுக்கு மட்டும்தான் அழகாக இருக்கிறது என்று தனுஷ் பட ஹீரோயினை ரசிகர்கள் வர்ணித்துள்ளனர்.

Recommended Video

Celebrity Cooking Challenge | Shanthanu KiKi | Roja | Self Quarantine

தனுஷ் ஜோடியாக, அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், அமைரா தஸ்துர். படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி இருந்தார்.

இதில், சிறப்பாக நடித்திருந்த இவர் பிறகு இந்தியில் கவனம் செலுத்தினார்.

பைனான்ஸ் பிரச்னை

பைனான்ஸ் பிரச்னை

ஜாக்கிசானுடன் குங்க் பூ யோகா, காலா காண்டி, மேட் இன் சைனா உட்பட சில படங்களில் நடித்தார். தமிழில், சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆனார். சலீம் கவுஸ், கோவை சரளா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கினார். முக்கால் வாசி படம் முடிந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கி உள்ளது.

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

இவர், அடிக்கடி தனது புகைப்படங்களை, இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம். அதைப் பார்ப்பதற்காகவே, ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் இப்போது புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். மகாராஷ்ட்ரா மாநில மலைப்பிரதேசமான கண்டாலாவில் இருந்து அவர் எடுத்துள்ள போட்டோஸ் அவை.

பயம் வேண்டாம்

உங்கள் விழிகளின் குழப்பத்துக்கும் உங்கள் குரலில் இருக்கும் அனலுக்கும் பயம்கொள்ள வேண்டாம். எல்லாவற்றுக்கும் மேலாக, புயல்களால் நிரம்பும்போது உங்கள் ஆன்மா இன்னும் அழகாக மாறுகிறது என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் ஆரவாரமாக கமென்ட் அடித்துள்ளனர். சிலர், ஊதா கலர் உங்களுக்கு மட்டும்தான் நச்சுன்னு இருக்கு என்று சிலர் கூறியுள்ளனர்.

கண்களில் நிலவு

கண்களில் நிலவு

கொரோனா நேரத்துல இந்த போட்டோஷூட் எங்க நடந்தது என்று சிலர் கேட்டுள்ளனர். சிலர் உங்கள் கண்களில் நிலவு தெரிகிறது என்றும் உங்க முகத்துல ஒரு மேஜிக் இருக்கு என்றும் நீங்க வேற லெவல் அழகி, சொர்க்கத்தின் மொழியில்தான் உங்களை வர்ணிக்கமுடியும் என்றும் வழிந்துள்ளனர். ஒரு ரசிகர், உங்க கண்களின் ஒளியை நான் சேமிக்கணும் என்று தெரிவித்துள்ளார்.

பர்மிஷன்

பர்மிஷன்

இன்னொரு ரசிகர், கொரோனா பீதியில இருக்கிறோம், அங்க கண்டாலாவுல என்ன பண்றீங்க? என்று கேட்டுள்ளார். 'உங்களை வர்ணிச்சு அழகழகா கவிதை எழுதியிருக்கிறேன். உங்க அனுமதி கிடைச்சா, இங்க பிரசுரிக்கிறேன். பதில் சொல்வீங்களா? என்று பர்மிஷன் கேட்டுள்ளார். அமைராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X