'சன்'னே சன்கிளாஸ் போட்டுத்தான் உங்களை பார்க்கும்.. தனுஷ் ஹீரோயினை தாராளமாய் வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: தனுஷ் பட ஹீரோயின் வெளியிட்டுள்ள பிகினி போட்டோவை ரசிகர்கள் தாராளமாக வர்ணித்துள்ளனர்.
Recommended Video
நடிகை அமைரா தஸ்துர் வெளியிட்டுள்ள போட்டோவுக்கு ரசிகர்கள் கவிதையாக அவரை வர்ணித்து வருகின்றனர்.
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள், இதன் பாதிப்பில் சிக்கியுள்ளன.
அதைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்தியாவிலும் இதன் அதிகரித்து வருகிறது.

லாக்டவுன்
இதுவரை இரண்டாயிரத்து எண்ணூறுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கொரோனாவுக்காக பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

நடிகர், நடிகைகள்
படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர். இதனால், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நடிகர், நடிகைகள் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் எடுத்து தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் தங்கள் த்ரோபேக் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சந்தானம் ஜோடி
அடிக்கடி போட்டோக்களை பதிவிடும் நடிகைகளும் நடிகை அமைரா தஸ்துரும் ஒருவர். இவர், தமிழில் தனுஷ் ஜோடியாக, அனேகன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். பிறகு ஜாக்கிசானுடன் குங்க் பூ யோகா, இந்தியில் காலாகாண்டி, மேட் இன் சைனா உட்பட சில படங்களில் நடித்தார். தமிழில், சந்தானம் ஜோடியாக ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆனார்.

த்ரோபேக் ஸ்டில்
இந்தப் படத்தை மணிகண்டன் இயக்கினார். முக்கால்வாசி படம் முடிந்த நிலையில் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கி உள்ளது. இந்நிலையில் தனது அமைரா இப்போது புதிய பிகினி ஸ்டில்லை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், ஞாயிற்றுக் கிழமைன்னா இப்படித்தான்' என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இது அவரது த்ரோபேக் ஸ்டில்.

கண்கள் போதாது
துபாயில் எடுக்கப்பட்ட கிளாமர் போட்டோவுக்கு ரசிகர்கள் ஜாலி கேலி கமென்ட்களை பதிவிட்டுள்ளனர். சிலர் அவரது அழகை வர்ணித்துள்ளனர். ஒருவர், உங்க அழகை ரசிக்க, ரெண்டு கண் போதாது என்று கூறியுள்ளார். 'ஒவ்வொரு நாளும் சண்டே-வாக இருந்தால், நாங்க தினமும் உங்க பிகினி போட்டோவை பார்க்கலாம் என்று இன்னொருவர் கூறியுள்ளார்.

தேவதைகள்
ஒரு நெட்டிசன், உங்களை அந்தச் சூரியனே, சன் கிளாஸ் போட்டுத்தான் பார்க்கும் என்று கூறியுள்ளார். வேறொரு ரசிகர், நான் தேவதைகளை பார்த்ததில்லை, அவர்கள் எல்லோரும் உங்களை விட அழகில் குறைவாகத்தான் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். சேலையோ, பிகினியோ அல்லது வேறு உடைகளோ, எதை அணிந்தாலும் என்று ஒருவர் வழிந்துள்ளார்.

பிறந்த நாள்
இன்னும் சிலர் உங்கள் கண்கள், சொர்க்கத்துக்கான வாசல் என்றும் சிலர், அதிகமாக பிகினி போட்டோக்களை பதிவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். உங்கள் அழகுக்கு முன் எதுவுமே சமமில்லை என்றும் இந்த பிகினியில் செம ஹாட்டாக இருக்கிறீர்கள் எனவும் கூறியுள்ளனர். தனக்கு பிறந்த நாள் என்று கூறியுள்ள ஒரு ரசிகருக்கு, இனிய குவாரைன்டைன் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











