என்னா வாசகம்? அழகானவங்களுத்தான் இதெல்லாம் நடக்கும்... தனுஷ் நாயகியை தாறுமாறாய் புகழும் ரசிகர்கள்

By

சென்னை: தனுஷ் பட ஹீரோயின் ஹாட் புகைப்படத்துடன் வெளியிட்டிருக்கும் வாசகத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இஸாக் என்ற இந்தி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். அடுத்த படமே அவருக்கு கோலிவுட்டில் கிடைத்தது.

அது, இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவான அனேகன். இதில் நடிகர் தனுஷுடன் ஜோடியாக நடித்தார்.

ஓடி ஓடி உழைக்கணும்

ஓடி ஓடி உழைக்கணும்

அந்தப் படத்திற்கு பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கால் பதித்தார். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துவந்த அமைரா இப்போது, தமிழில் ஓடி ஓடி உழைக்கணும் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதில் சந்தானம் ஹீரோ. மணிகண்டன் இயக்குகிறார்.

ஹாட் போட்டோ

ஹாட் போட்டோ

இவர், அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் கோவா சென்ற அமைரா, அங்கிருந்து தனது புதிய ஹாட் ஸ்டில்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிந்திருந்தார். அதில் ஆற்றங்கரை மணலில் ஹாயாக அமர்ந்திருக்கிறார் அமைரா. அந்த புகைப்படங்களும் வைரலானது.

வெள்ளை உடையில்

இப்போது புதிய படங்களை பதிவிட்டுள்ளார். வெள்ளை உடையில் கைகளால் மார்பகங்களை மறைத்தபடி இருக்கும் அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒவ்வொரு போட்டோ போடும் போதும் கேப்ஷன் போல சில வாசகங்களை குறிப்பிடுவார் அமைரா. சில ரசிகர்கள், அதை மட்டும் ரசித்து பாராட்டுவது உண்டு.

Recommended Video

செக்ஸ் சீனில் நடிக்க மாட்டேன் - தனுஷ் பட ஹீரோயின் பேட்டி- வீடியோ

என்னுள்ளே

இப்போது அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், நான் யாரென்று நீங்கள் கேட்கலாம். நான் சந்தித்த எல்லாரிமிருந்தும் நான் அனுபவித்தவற்றில் இருந்தும் உருவாக்கப்பட்டிருக்கிறேன். எனது தோழிகளின் சிரிப்பையும், எனது பெற்றோருடனான வாக்குவாதங்களையும், சிறு குழந்தைகளின் பேச்சையும் என்னுள்ளே வைத்திருக்கிறேன்.

கசப்பான வார்த்தைகள்

கசப்பான வார்த்தைகள்

கடுமையான விவாதங்களில் இருந்து வரும் கசப்பான வார்த்தைகள், வெளிப்படுத்த முடியாத உணர்ச்சிகளை வைத்திருக்கிறேன். இந்த மக்களிடமிருந்தும் இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்தும்தான் நான் உருவாக்கப்பட்டிருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். இந்த தத்துவ வார்த்தைகளை ரசிகர்கள் அதிகமாக பாராட்டியுள்ளனர். 'அழகான மனிதர்களுக்குத்தான் அழகான விஷயங்கள் நடக்கும், அதற்கு நேரம் மட்டுமே தேவை, உங்கள் கனவை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X