எனக்கெல்லாம் அது சரிப்படாது...!
எனக்கெல்லாம் அதீதமான கவர்ச்சி எடுபடாது. உங்களது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணிடம் எப்படி எதிர்பார்ப்பீர்களோ, அதேபோலத்தான் என்னைப் பார்க்க விரும்புகிறார்கள் ரசிகர்கள் என்கிறார் அனன்யா.
நாடோடிகள் படத்தில் முயல் குட்டி போல துருதுருவென வந்து போன அனன்யா இப்போது மலையாளத்தில் பிசியாகியுள்ளார். சொந்த மொழியான மலையாளத்தில் பிசியாக இருந்து வரும் அவர் தமிழிலும் சீடன் என்ற படத்தில் நடிக்கிறார்.
அவரிடம் யாராவது தெரியாத்தனமாக கவர்ச்சியா நடிப்பீங்களா மேடம் என்று கேட்டு விட்டால் போதும், பொறிந்து தள்ளி விடுகிறாராம்.
இப்படி கவர்ச்சியாக நடிப்பேன், அப்படி நடிப்பேன் என்று சில நடிகைகள் கதை அளக்கிறார்கள். கவர்ச்சி என்றால் அதற்கு எல்லையே கிடையாது, இந்த அளவுக்கு கவர்ச்சி, அந்த அளவுக்கு கவர்ச்சி என்றெல்லாம் அளவுகோல் வைக்க முடியாது.
கவர்ச்சியாக நடிக்க முடிவு செய்து விட்டால், அப்படி நடித்துதான் ஆக வேண்டும். அதில் அளவுகோல் வைப்பதாக கூறுவது காமெடியாக இருக்கிறது.
என்னைப் பொறுத்தவரை கதைக்கு ஏற்ற இயல்புடன் நான் நடிப்பேன். என்னைப் பார்த்தால் கவர்ச்சியாக நடிப்பவள் போலவா இருக்கிறேன். எனக்கு கவர்ச்சியும் சூட் ஆகாது. பக்கத்து வீட்டுப் பெண்களைப் போலத்தான் என்னையும் ரசிகர்கள் பார்க்கிறார்கள். எனவே அதே பாதையில்தான் நானும் போவேன் என்கிறார் அனன்யா.
அடேங்கப்பா!


Click it and Unblock the Notifications











