Shalu shamu: எல்லாமே ஒரே சிவப்பா இருக்கே.. ஹைலைட்டே அதுதான்.. ஷாலு ஷம்முவின் நியூ லுக்!

சென்னை: சோஷியல் மீடியாவில் பிரபலமாவதன் மூலம் பட வாய்ப்பை பெற முடியும் என்பதற்காக பல நடிகைகள் ஆடைகளை குறைத்து ஏடாகூடமான போட்டோக்களை போட்டு பட வாய்ப்பை தேடி வருகின்றனர். அந்த வகையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கும் போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.

இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. அந்த படத்தில் சூரியின் காதலியாக நகைச்சுவை காட்சியில் நடித்திருந்தார். அந்த படத்தின் மூலம் ஷாலு ஷம்முவின் முகம் அனைவருக்கும் பரிச்சயமானது. அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் இருட்டு அறையில் முரட்டுக்குத்து, திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒரு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.

Shalu shamu instagram

நடிகை ஷாலு ஷம்மு: வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒல்லியாக கருப்பாக இருந்த ஷாலு ஷம்மு, திடீரென உடல் எடை கூட கவர்ச்சி நடிகை போல சும்மா கும்னு மாறிவிட்டார். உடல் எடை கூடிய பிறகு, சோஷியல் மீடியாவில் ரீல் வீடியோ போடுவது, போட்டோஷூட் நடத்துவது என படு பிஸியாகவே இருக்கிறார். ஓரிரு திரைப்படத்தில் அதுவும் கூட்டத்தோடு கூட்டமாக வந்து தலைக்காட்டி சென்ற ஷாலு ஷம்முவுக்கு இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர் இருப்பதால், படவாய்ப்பு வந்தால் என்ன, வராவிட்டால் என்ன எனக்கு இருக்கவே இருக்கு போட்டோஷூட் என சோஷியல் வீடியாவில் புகுந்து விளையாடி வருகிறார் ஷாலு ஷம்மு.

Shalu shamu instagram

எல்லாமே ஒரே சிவப்பா இருக்கே: நடிகை ஷாலு ஷம்முவை இன்ஸ்டாகிராம் ஒரு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். தற்போது இவர் சிவப்பு நிற உடையில் ஸ்டையாக இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு மேட்சான செருப்பையும் சிவப்பு நிறத்திலேயே போட்டுள்ளார்.அதே போல, ஸ்டைலான உடைக்கு ஏற்றபடி கழுத்தில் கோல்ட் செயினும், சுட்டை முடியும் சும்மா அம்சமா உள்ளது. இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வரும் நிலையில், கழுத்தில் இருப்பது தான் ஹைலைட் என கமெண்ட் பாக்ஸில் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

FAQs
நடிகை ஷாலு ஷம்முவை இன்ஸ்டாகிராமில் எத்தனை பாலோவர்கள் பின் தொடர்கின்றனர்?

நடிகை ஷாலு ஷம்முவை இன்ஸ்டாகிராமில் 4மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்கின்றனர்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X