குறுக்கு சிறுத்தவளே நெஞ்ச குங்குமத்தில் கரச்சவளே... மாராப்பில் மயக்கும் மடோனா செபாஸ்டின்!

சென்னை : இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தில் நடித்து அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை மடோனா செபாஸ்டின்

விஜய் சேதுபதியுடன் இணைந்து காதலும் கடந்து போகும்,ஜூங்கா, கவண் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

இப்பொழுது தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வரும் இவர் இப்போது வித்தியாசமான உடையில் மாராப்பில் மயக்கும் புகைப்படம் லைக்குகளை குவிக்கிறது

 மூன்று நாயகிகள்

மூன்று நாயகிகள்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி இருந்தாலும் தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பாக தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் திரைப்படமாக இன்றுவரை உள்ளது நிவின்பாலி நடிப்பில் வெளியான இந்த படத்தில் சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டின் என மூன்று நாயகிகள் நடித்திருப்பார்கள். நடிகை மடோனா செபாஸ்டின் கடைசியாக சில காட்சிகளில் மட்டுமே வந்து இருந்தாலும் மனதுக்கு நிறைவான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருப்பார். ப்ரேமம் கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அமைந்தன.

 தொடர்ந்து மூன்று படங்களில்

தொடர்ந்து மூன்று படங்களில்

குறிப்பாக விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து மூன்று படங்களில் தொடர்ந்து நடித்தார். சூது கவ்வும் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மற்றும் நலன் குமாரசாமி இணைந்த திரைப்படம் காதலும் கடந்து போகும். பிரபல கொரியன் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது. காதலை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் காட்டி இருந்த இந்த படத்தில் விஜய் சேதுபதி மடோனா செபாஸ்டின் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

அதைத்தொடர்ந்து ஜூங்கா, கவண் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தனர்

 ஷ்யாம் சிங்கா ராய்

ஷ்யாம் சிங்கா ராய்

மலையாளம் மற்றும் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக உள்ளார். நானியின் வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் வெளியான ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் லாயர் பத்மாவதி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற இந்த படத்திற்கு பிறகு மடோனா செபாஸ்டினுக்கு தெலுங்கில் நல்ல கதாபாத்திரங்கள் தொடர்ந்து வருகிறது.

Recommended Video

Nisha Krishnan Exclusive | என்னோட HANDBAG ல இருக்கும் Secret Snacks | Filmibeat Tamil
 மாராப்பில் மனதை மயக்கும்

மாராப்பில் மனதை மயக்கும்

சுந்தர பாண்டியனுக்கு பிறகு மீண்டும் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரனுடன் சசிகுமாரின் இந்த கொம்பு வச்ச சிங்கம் திரைப்படம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒருவழியாக திரையரங்கில் வெற்றிகரமாக வெளியானது. இதில் கதாநாயகியாக கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் மடோனா செபஸ்டின் இப்பொழுது வெள்ளை உடையில் மாராப்பில் மனதை மயக்கும் புகைப்படம் எக்கச்சக்க லைக்குகளை பெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X