Shruti Haasan - சூனியக்காரி என்பதில் பெருமைதான்.. ஸ்ருதிஹாசன் பிரத்யேக பேட்டி

சென்னை: Shruti Haasan Exclusive Interview (ஸ்ருதி ஹாசன் பிரத்யேக பேட்டி) நடிகை ஸ்ருதிஹாசன் ஒன் இந்தியா வெப்சைட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.

கமல் ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் பாடகியாக தனது கேரியரை ஆரம்பித்தவர். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். சர்வதேச தரத்திலான குரல் வளம் உடையவர் என பலரால் பாராட்டப்பட்டவர் ஸ்ருதிஹாசன்.

Actress And Singer Shruti Haasan Exclusive interview

நடிகையாக அறிமுகம்: பாடல் பாடுவதில் பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ருதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆராய்ச்சி மாணவராக அந்தப் படத்தில் நடித்திருந்த ஸ்ருதிஹாசன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். குறிப்பாக, ஒரு மீட்டிங் சீனில் ஸ்ருதிஹாசன் வெளிப்படுத்திய நடிப்பும், டயலாக் டெலிவரியும் அவருக்கு புகழை ஏற்படுத்திக்கொடுத்தன.

தனுஷுடன் ஸ்ருதி ஹாசன்: ஏழாம் அறிவு பெற்றுக்கொடுத்த வரவேற்பை அடுத்து தமிழில் 3 படத்தில் நடிக்க கமிட்டானார் ஸ்ருதிஹாசன். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த அந்தப் படத்தில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி, தனுஷின் மனைவி மூன்று காலகட்டத்திற்கான பக்குவத்தையும், உடல்மொழியையும் ஸ்ருதிஹாசன் தனது நடிப்பில் வெளிக்கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார் ஸ்ருதிஹாசன்.

தொடர்ந்து பிஸி: தமிழில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு மொழியில் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அந்தவகையில் கடைசியாக அவர் 'வால்டர் வீரய்யா', 'வீரசிம்ஹா ரெட்டி' படத்தில் நடித்தார். தற்போது சலார் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்க பிரபாஸ் ஹீரோவாக நடித்திருக்கிறார். படமானது டிசம்பர் 22ஆம் தேதி டன்கி படத்துக்கு போட்டியாக களமிறங்குகிறது. அதேபோல் தி ஐ என்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் ஹாலிவுட் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் ஸ்ருதி

ஸ்ருதிஹாசன் பேட்டி: இந்நிலையில் ஸ்ருதிஹாசன் ஒன் இந்தியா வெப்சைட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "பிரசாந்த் நீலும், பிரபாஸும் கதை சொல்லலில் ஒரு மரபை வைத்திருக்கிறார்கள். இந்த சலார் படம் பிரபாஸுக்காக உருவாக்கப்பட்டதுதான். இந்த கதை அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படியாகத்தான் இருக்கும். பிருத்விராஜ் உள்ளிட்டோரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். இருந்தாலும் அது என்னுடைய படமும்தான். சலார் படக்குழுவினரை போல் நான் இதுவரை பார்த்ததில்லை. பிரபாஸ் உள்ளிட்ட அனைவருமே என்னை என்னையாகவே இருக்கவிட்டு படப்பிடிப்பை அனுபவிக்க வைத்தனர்.

ஆக்‌ஷன் படம்தான்: சலார் திரைப்படம் பெரிய ஆக்‌ஷன் படம்தான். டன்கி படத்துடன் களமிறங்குவதைப் பற்றி கவலை இல்லை. ஏனெனில் எங்கள் படம் மீது எங்களுக்கு அக்கறையும், நம்பிக்கையும் இருக்கிறது. தி ஐ திரைப்படம் பெண்களின் பார்வையில் ஒரு வன்முறை எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும் என்பதை பேசும். நான் சூனியக்காரி என்று அழைக்கப்படுவதால் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. தவறாக புரிந்துகொள்ளப்பட்ட சூனியக்காரி என்ற வார்த்தையால் அழைக்கப்படுவதை நான் பாராட்டாகவே பார்க்கிறேன்.

இப்போதைக்கு இல்லை: சலார் படத்துக்கு கிடைத்திருக்கும் பட்ஜெட் தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படத்திற்கு கிடைக்காததுதான். இருந்தாலும் எதிர்காலத்தில் பெண்களை மையமாக வைத்து எடுக்கும் படங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். இது ஒரு பொருளாதார வடிவமாகவே இருக்கிறது. பெண்களை மையமாக வைத்து படம் எடுத்தால்கூட அதிலும் ஒன்று எக்ஸ்ட்ரீமாகவே செல்கிறார்கள். ஆனால் இடைப்பட்ட அம்சங்களை வைத்து யாரும் உருவாக்குவதில்லை. பெண்களை மையமாக வைத்த படத்தில் பொருளாதாரம், கதை சொல்லல் ஆகியவைகளை மட்டும் மாற்றாமல் மொத்தமாகவே மாற்ற வேண்டும் என ஒரு பார்வையாளராக சொல்கிறேன்" என்றார்.

Actress And Singer Shruti Haasan Exclusive interview

என் அப்பா சிறந்த பாடகர்: இதனையடுத்து சமீபத்தில் அவர் வெளியிட்ட மான்ஸ்டர் மேஜிக் என்ற சிங்கிள் குறித்து பேசிய ஸ்ருதி, "எனது அப்பா கமல் ஹாசன் மிகச்சிறந்த பாடகர் என்று பலருக்கும் தெரியாது. ஆஷா போஸ்லே ஜி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் எங்கள் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி ஆர்.டி.பர்மன், இளையராஜா ஆகியோரையும் நான் கேட்டுதான் வளர்ந்தேன். க்ரிஸ் கார்னல் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

அப்பா அட்வைஸுக்கு நோ: அப்பாவின் அட்வைஸ் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும். ஆனால் அவர் ஒரு கோணத்தில் பேசுகிறார். இருந்தாலும் சில சமயம் எனக்கு அனுபவம் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நம்புகிறேன். ஏனெனில் நான் இண்டஸ்ட்ரியின் முற்றிலும் மாறுபட்ட காலத்திலும் இடத்திலும் இருக்கிறேன். எனவே அவரது அறிவுரைகளை சில சமயங்களில் செயல்படுத்த முடியாமல் போகிறது." என முடித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X