தீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்!
சென்னை : மாஸ்டர் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்றாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நச்சுன்னு தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
கா,நோ என்ட்ரி உள்ளிட்ட நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வரும் இவருக்கு மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் பிசாசு 2 ல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது தீவிர வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

பன்முகத் திறமை
மிகச்சிறந்த பன்முகத் திறமை கொண்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா சினிமாவிற்கு முதல் முறையாக பாடகியாக அறிமுகமான நிலையில் இப்போது வெற்றிகரமாக பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்து வருகிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் இவரது நடிப்பு கவனத்தை பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து வெளியான ஆயிரத்தில் ஒருவன் முழு நடிகையாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

துணிச்சலான கதாபாத்திரம்
மயங்க வைக்கும் பாடல்கள் பாடுவது ஒருபுறமிருந்தாலும் நடிப்பதில் மிகத் தீவிரமாக இறங்கி தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஆண்ட்ரியாவுக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாக இருக்க தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் சிறந்த நடிகை என்ற பெயரும் இவருக்கு இருக்கிறது. அதை நிரூபிக்கும் வகையில் தரமணி, ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் இன்றளவும் இவரது நடிப்பு நிலைத்து நிற்கிறது.

நாயகிகளுக்கு முக்கியத்துவம்
பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வசூல் வேட்டை நடத்தி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சொல்லிக் கொள்ளக்கூடிய கூடிய அளவிற்கு கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வரும் ஆண்ட்ரியா அடுத்தடுத்து நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

எக்ஸ்க்ளூசிவ் பிக்ஸ்
அந்த வகையில் நோ என்ட்ரி மற்றும் கா ஆகிய திரைப்படங்கள் இவரின் சோலோ பர்ஃபாமன்ஸில் உருவாகி வர மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2ல் பயமுறுத்தும் கதாபாத்திரத்தில் நடித்து மற்றுமொரு பிளாக்பஸ்டர் திரைப்படத்தை சினிமாவுக்கு கொடுக்க உள்ளார். இந்தநிலையில் மாஸ்டர் படத்திற்காக தீவிரமாக வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்டு படத்திலும் அசத்தி இருந்த ஆண்ட்ரியா வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட எக்ஸ்க்ளூசிவ் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்க இப்பொழுது இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளன.


Click it and Unblock the Notifications











