ஆண்ட்ரியாவுக்கு இன்று பிறந்தநாள்... பிசாசு 2 படக்குழுவினரின் சர்ப்ரைஸ் கிஃப்ட் !

சென்னை : கவர்ச்சி காட்டும் நடிப்பு மட்டுமல்லாமல் மயங்க வைக்கும் குரலும் ரசிகர்களை ஏங்க வைத்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

முன்னணி நடிகைகளே நடிக்க தயங்கும் கதாபாத்திரங்களில் துணிந்து நடித்து பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று வரும் ஆண்ட்ரியா இப்பொழுது விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சோலோ ஹீரோயின் கதைகளிலும் நடித்து வரும் ஆண்ட்ரியா டிசம்பர் 21ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் நிலையில் பிசாசு 2 படக்குழு இவருக்கு பிறந்தநாள் பரிசாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

மலையாள திரைப்படங்களில்

மலையாள திரைப்படங்களில்

சிறந்த பாடகி சிறந்த நடிகை என பல திறமைகளைக் கொண்டு சகலகலா வல்லவியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களில் நடித்து தாறுமாறு செய்துவரும் நிலையில், இப்பொழுது விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நோ என்ட்ரி

நோ என்ட்ரி

முன்னணி நடிகைகள் பலரும் இப்பொழுது சோலோ கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் அசத்தி வரும் நிலையில் அந்த வரிசையில் நடிகை ஆண்ட்ரியாவும் இணைந்திருக்க இப்பொழுது கா மற்றும் நோ என்ட்ரி உள்ளிட்ட திரைப்படங்களில் சோலோவாக நடித்து வர விரைவில் திரையரங்குகளில் மிரட்ட உள்ளார்.

ஆண்ட்ரியா கதாநாயகியாக

ஆண்ட்ரியா கதாநாயகியாக

2004ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று ரசிகர்களை கொண்டாட வைத்த நிலையில், தனது சைக்கோ திரைப்படத்தை தொடர்ந்து இப்பொழுது பிசாசு 2 திரைப்படத்தின் வேலைகளில் மிக மும்முரமாக பணியாற்றி வரும் மிஷ்கின் இதில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் துப்பறிவாளன் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றிய நிலையில் பிசாசு 2ல் மீண்டும் இணைந்திருக்க ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பிசாசு 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

மாஸ்டர் அரண்மனை 3, பிசாசு 2, கா, மாளிகை, வட்டம், நோ என்ட்ரி என அடுத்தடுத்த திரைப்படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் டிசம்பர் 21ஆம் தேதியான இன்று ஆண்ட்ரியா தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இணையதளத்தை வெடிக்க வைத்து வரும் நிலையில் பிசாசு 2 படக்குழு இவருக்கு பிறந்த நாள் பரிசாக அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X