Actress Andrea jeremiah: ப்பா.. என்னா குளிரு குளிருது.. சிக்கிம்மில் சில் செய்யும் ஆன்ட்ரியா!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா பாடகியாகவே தன்னை கோலிவுட்டில் அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடைய தனித்துவமான குரலால் ஏராளமான ரசிகர்களை கவரும்வகையில் பல வெற்றிப்பட பாடல்கள் பாடியுள்ளார். இதுமட்டும் இல்லாமல் தன்னுடைய கவர்ச்சி மற்றும் அழகால் இயக்குனர்களையும் கவர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைகளங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா அடுத்ததாக பிசாசு 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஆண்ட்ரியா, தன்னுடைய சுற்றுலா பயணங்கள், இசை நிகழ்ச்சிகள், போட்டோ ஷூட் புகைப்படங்கள் ஆகியவற்றை அடுத்தடுத்து பதிவிட்டு வருவதன்மூலம் அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

Andrea Jeremiah Sikkim tamil cinema Instagram

நடிகை ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா பாடகியாக தான் தன்னுடைய கேரியரை சினிமாவில் துவங்கினார். இவருடைய கவர்ச்சியான மற்றும் தனித்துவமான குரல் மட்டுமில்லாமல் உடல் அமைப்பும் ஏராளமான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வையில் பட பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக 5 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்திருப்பார். ஆயினும் இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் அழகும் கவர்ச்சியும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

தேர்ந்தெடுத்த கேரக்டர்கள்: ஆயினும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கக்கூடிய ரோல்களை மட்டுமே கமிட் செய்து நடித்து வருகிறார். பாடகி ஆகவும் நடிகையாகவும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் ஆண்ட்ரியா டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பல முன்னணி நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். இது மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் இசைக்கச்சேரிகளிலும் அடுத்தடுத்து இவர் பங்கேற்று வருகிறார். இவரது யூனிக்கான வாய்சிற்கு என்று தனியாக ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது. புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா பாடிய ஊ சொல்றியா மாமா என்ற பாடலை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார்கள்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இதுபோன்ற அடுத்தடுத்து சிறப்பான பாடல்களை பாடியுள்ளார் ஆண்ட்ரியா. இவர் 40 வயதை நெருங்கிய சூழலிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் முன்னதாக தன்னுடைய காதல் மற்றும் பிரேக்கப் குறித்தும் பல விஷயங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஆண்ட்ரியா, தன்னுடைய இசை கச்சேரிகள் மூலம் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தான் சுற்றுலா செல்லும் இடங்களின் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை அடுத்தடுத்து கட்டிப்போட்டு வருகிறார்.

சிக்கிமில் ஆண்ட்ரியா: அந்த வகையில் தற்போது சிக்கிமில் சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டுள்ளார் ஆண்ட்ரியா. அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சிக்கிமின் காலை நேரம் குறித்த ஆண்ட்ரியாவின் வீடியோ ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் தலையில் குல்லாவுடன் க்யூட்டான போஸ்களில் அவர் அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவையும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து அதிகமான லைக்ஸ்களை பெற்று வருகிறது. அடுத்ததாக ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X