For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆண்ட்ரியா அவங்க பேரப்பிள்ளைகளுக்கு 'அந்த' கதையதான் சொல்லப்போறாங்களாம்.. அன்போஸ்டட் லெட்டர்!

  |

  சென்னை: நடிகை ஆண்ட்ரியா பேரப்பிள்ளைகளுக்கு சொல்லப் போகும் கதையின் அன்போஸ்டட் லெட்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  Master Movie Making | Andrea | Lokesh Kanagaraj | Malavika Mohanan

  நடிகை ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் படத்தில் பெயரிடப்படாத பாத்திரத்தில் வந்து சென்றார். தொடர்ந்து பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, அரண்மனை, வலியவன், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  விஸ்வரூபம் 2, வட சென்னை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

  தவறான தொடர்பு

  தவறான தொடர்பு

  அண்மையில் திருமணம் ஆனவருடன் தவறான தொடர்பு வைத்திருந்ததால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு ஆளானதாகவும் கூறினார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி மாதக் கணக்கில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறினார் ஆண்ட்ரியா. அவரது இந்த குற்றச்சாட்டு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  View this post on Instagram

  This too shall pass 🌈

  A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

  கதைகள்

  ஒரு நாள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் குறித்து நமது பேரக் குழந்தைகளிடம் சொல்லுவோம். நமது வேலைகள், வழக்கமான காலை நடைப்பயிற்சி, நீண்ட தூரப் பயணம், பிடித்த உணவகங்களில் உணவு, திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள், வீட்டு பார்ட்டிகள், மற்றும் நமது உயிர்கள் என அனைத்துக்கும் பயந்து போய் இருந்த காலம்.

  தனிமையில் ஒற்றுமை

  தனிமையில் ஒற்றுமை

  இந்த பித்துப் பிடிக்கும் சூழலை நாம் எப்படிக் கையாண்டோம் என்பதே அவர்கள் கேட்க விரும்பும் கதையாக இருக்கும். இவ்வளவு குழப்பத்துக்கு நடுவில் தனிமையில், ஒற்றுமையாக நாம் நல்லறிவைத் தேர்ந்தெடுத்தோமா, பேராசையை விட்டுவிட்டு பெருந்தன்மையைத் தேர்ந்தெடுத்தோமா?

  கை தட்டினோம்

  கை தட்டினோம்

  இப்போது நாம் இரண்டு விஷயங்களை செய்யலாம். ஒன்று கற்பனையாக அதைச் சொல்லலாம் அல்லது வாழ்ந்து காட்டலாம். வீட்டிலிருந்தோம், ஒரு கட்டத்தில் சமூக வலைதளங்களில் சோர்ந்து போனோம். சலித்துப் போய் கிரியேட்டிவிட்டியோடு இருந்தோம், பால்கனிகளில் நின்று, வெளியே சேவை செய்து கொண்டிருப்பவர்களுக்காகப் பாட்டு பாடினோம், கை தட்டினோம் என்று நாம் அவர்களுக்குச் சொல்லலாம்.

  கெடுக்காதீர்கள்

  கெடுக்காதீர்கள்

  ஒரு புதிய நாளைப் பார்க்க நாம் உயிர் பிழைத்தோம் என்ற இந்தக் கதையைக் கெடுக்காதீர்கள்... இப்படிக்கு க்ளைமாக்ஸ் என அன்போஸ்டட் போஸ்ட்கார்டு என்ற போஸ்ட் கார்ட் டிசைனில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

  View this post on Instagram

  #21momentsofhope @worldvisionindia #COVID19

  A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

  ஆண்ட்ரியா வீடியோ

  அதில் எதற்கும் அச்சப்படாமல் இந்த சூழ்நிலையை கடந்து வரவேண்டும் என தெரிவித்துள்ளார். அதோடு மக்கள் நம்பிக்கையுடன் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையும் கடந்து போகும் என்றும் நடிகை ஆண்ட்ரியா வீடியோ வெளியிட்டுள்ளார்.

  English summary
  Actress Andrea having story for grand children unposted post card. She also has requested people to stay home in video message.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X