Actress Andrea: தலைகீழாக தொங்கியபடி ஆண்ட்ரியா வொர்க்அவுட்.. ஆனாலும் சிரிப்பு மிஸ்ஸாகலையே!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா நடிகை, பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பல்வேறு திறமைகளுடன் கோலிவுட்டில் பிசியாக இருந்து வருகிறார். தொடர்ந்து சர்வதேச அளவில் நடத்தப்படும் பல இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தன்னுடைய ஆடலுடன் கூடிய பாடல்களை ரசிகர்களுக்கு விருந்தாக்கி வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஆண்ட்ரியா அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றை பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர்.

நடிகை ஆண்ட்ரியா: பாடகியாக தனது பயணத்தை துவங்கிய நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். பாடகியாக மட்டுமில்லாமல் நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பல்வேறு தளங்களில் பயணித்து வரும் ஆண்ட்ரியா, சர்வதேச அளவில் நடைபெற்று வரும் பல இசைக்கச்சேரிகளில் சிறப்பாக பங்கேற்று தன்னை ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் வைத்து வருகிறார். சில படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா, அடுத்ததாக கவினுடன் இணைந்து மாஸ்க் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா வில்லியாக நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் ஆண்ட்ரியா. அவரது போட்டோ ஷூட் புகைப்படங்கள், ஃபிட்னஸ் வீடியோக்கள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், இசைக்கச்சேரிகள் என அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் களைகட்டி வருகிறது. இதனால் இவரை இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். 40 வயதை நெருங்கிய நிலையிலும் திருமணம் செய்யாமல் இருக்கும் ஆண்ட்ரியா, தன்னுடைய அழகையும் பிட்னசையும் தொடர்ந்து சிறப்பாக மெயின்டெயின் செய்து வருகிறார். அந்த வகையில் இதற்கு காரணமான பிட்னஸ் பயிற்சிகளையும் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
வொர்க்அவுட் வீடியோ: இந்நிலையில் இன்றைய தினம் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் தலைகீழாக தொங்கியபடி பயிற்சி மேற்கொண்டதை பார்க்க முடிகிறது. ஆனாலும் தனக்கேயுரிய சிரிப்பை இந்த வீடியோவில் ஆண்ட்ரியா வெளிப்படுத்தியதையும் ரசிகர்கள் கவனிக்க தவறவில்லை. தன்னுடைய அழகு மற்றும் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கட்டி போட்டு வரும் ஆண்ட்ரியா தொடர்ந்து அதிகமான படங்களில் நடிக்கவில்லை. தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும்படியான படங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
பிசாசு 2 படம்: அந்த வகையில் ஆண்ட்ரியா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள பிசாசு 2 படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்த நிலையில் இரண்டாவது பாகம் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து திணறி வருகிறது.


Click it and Unblock the Notifications











