ஆட்டத்துல நானும் இருக்கேன்.. குட்டி டவுசரில் கவர்ச்சி காட்டிய ஆண்ட்ரியா!

சென்னை: பின்னணி பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார். ஆண்ட்ரியா பிசாசு 2 , நோ என்ட்ரி, மாளிகை ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர், தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் குதூகலமாக போஸ் கொடுத்துள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் புடவை கட்டிக்கொண்டு, குடும்ப குத்துவிளக்காக வந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் தான் நடிகை ஆண்ட்ரியா. வித்தியாசமான கதை அம்சத்தை கொண்ட இந்த படம், பெரிய அளவில் வெற்றிப்பெற்று பெரும் வசூலை அள்ளியது. அழகான முகம், அம்சமான நிறம் என அனைத்தும் பொருந்தி இருந்ததால், தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் ஆண்ட்ரியா.

Actress Andrea Jeeremiah instagram photos trending on social media

நடிகை ஆண்ட்ரியா: அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின் கமலுடன் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்த ஆண்ட்ரியாவிற்கு அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்தன. தரமணி, துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்து வந்த ஆண்ட்ரியா, நயன்தாரா, சமந்தா போல கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் சிபி ராஜுடன் வட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து அனல் மேலே பனித்துளி என்ற படத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.

Actress Andrea Jeeremiah instagram photos trending on social media

மிஸ்கினின் பிசாசு 2: மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி உள்ள பிசாசு 2 படத்தில் முக்கிய மான ரோலில் நடித்துள்ளார். இதில், குளியல் தொட்டியில் ரத்தம் படிந்த கால்களோடு ஆண்ட்ரியா முகம் தெரியாமல் தலைகீழாக கவிழ்ந்து படுத்து சிகரெட்டை கையில் வைத்துக் கொண்டிருக்கும் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை தூண்டியது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியாக நிர்வாண காட்சி ஒன்றில் நடித்திருந்தார். ஆனால், அந்த காட்சியை நீக்கிவிட்டதாக மிஸ்கின் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.

Actress Andrea Jeeremiah instagram photos trending on social media

சோ கியூட் சோ பியூட்டிபுல்: மயக்கும் குரல்வளம், அசரவைக்கும் அழகு, வசீகரிக்கும் பெண்ணான ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் அனிருத்துடன் நெருங்கி பழகி அவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. ஆனால், அதன் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். இதனால், மன விரக்தியில் இருந்த ஆண்ட்ரியா படங்களிலும் சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். தற்போது அதில் இருந்து மீண்டுள்ள இவர், வெளிநாட்டில் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். தற்போது இவர், இன்ஸ்டாகிராமில், வெள்ளை ஷர்ட், குட்டி டவுசருடன் அட்டகாசமாக போஸ்கொடுத்துள்ளார். இந்த போட்டோவிற்கு மலைபோல் லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X