3 ஆண்களுக்கு நிகரான பலத்தோடு அந்த படத்தில் நடிச்சிருக்காங்க ஆண்ட்ரியா ... எந்த படத்தில் தெரியுமா!

சென்னை: இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிசாசு இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது

பிசாசு 2ல் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வர இதில் விஜய் சேதுபதி,பூர்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா 3 ஆண்களுக்கு நிகரான பலத்தோடு இந்த படத்தில் நடித்துள்ளார் என புகழாரம் சூட்டியுள்ளார்

பேயை வித்தியாசமான கோணத்தில்

பேயை வித்தியாசமான கோணத்தில்

ஒரு நல்ல படம் வெற்றி பெறுகிறது அல்லது தோல்வி அடைகிறது என்பதையும் தாண்டி மனதுக்கு திருப்தியான படத்தை இயக்கி விட்டோம் என்று விரும்பும் இயக்குனர் மிஷ்கின் தொடர்ந்து தனித்துவமான படங்களை இயக்கி வருகிறார் வழக்கமான கமர்ஷியல் மசாலாக்கள் இல்லாத வித்தியாசமான படங்களை தனது படைப்புகளிலும் காட்டிவரும் இயக்குனர் மிஷ்கின் 2014 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம் பிசாசு. இந்த படத்தில் பேயை வித்தியாசமான கோணத்தில் காட்டியிருப்பார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு

நீண்ட இடைவெளிக்கு பிறகு

பொதுவாக பேய் படங்கள் என்றாலே அனைவரையும் பயமுறுத்தும் மக்களை கொல்லும் திக் திக் காட்சிகளாக இருக்கும் என இதுவரை அனைவரும் கண்டு கொண்டிருந்தார் ஆனால் இயக்குனர் மிஷ்கின் இதுவரை இருந்த பேய் படம் குறித்த அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து தேவதையாக காட்டியிருந்தது ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது பிசாசு வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்டு மாபெரும் வெற்றி பெற்றது.

ஆண்ட்ரியா அடல்ட் காட்சிகளில்

ஆண்ட்ரியா அடல்ட் காட்சிகளில்

பாடகியாக அறிமுகமாகி இப்பொழுது மிகச் சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ள ஆண்ட்ரியா கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் நடித்து பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளார் அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் பிசாசு இரண்டில் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் முழுக்க முழுக்க ஹாரர் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா பல அடல்ட் காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி,பூர்ணா, அஜ்மல் மற்றும் சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

3 ஆண்களுக்கு நிகரானவர்

3 ஆண்களுக்கு நிகரானவர்

பிசாசு 2ல் ஆண்ட்ரியாவின் நடிப்பு குறித்து பேசிய மிஷ்கின் இந்த படத்தில் ஆண்ட்ரியா 3 ஆண்களுக்கு நிகரான பலத்தோடு இந்த படத்தில் நடித்துள்ளார் அவர் நடிப்பைப் பார்த்து நானே மிரண்டு போய்விட்டேன் சமீபத்தில் டப்பிங் பட வேலைகள் முடிந்தது என்னை ஆச்சரியப்படுத்திய ஆண்ட்ரியா உங்களையும் திரையில் மிக விரைவிலேயே ஆச்சரியப்படுத்துவார் அவரது நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள் என பூரணமாக புகழ்ந்துள்ளார் மிஷ்கின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X