Andrea Jeremiah: ஆண்ட்ரியாவின் பயணத்தை மாற்றிய நிலச்சரிவு.. க்யூட் புகைப்படங்கள் பதிவு!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா பாடகியாக தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய சூழலில் இவரது அழகும் கவர்ச்சியும் இவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகளை தொடர்ந்து பெற்றுக் கொடுத்து வருகின்றன. தொடர்ந்து பாடகியாகவும் நடிகையாகவும் மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா.
சர்வதேச அளவில் ஏராளமான இசைக்கச்சேரிகளிலும் பங்கேற்று வரும் ஆண்ட்ரியா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தன்னுடைய இசைக்கச்சேரிகள் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்களை அடுத்தடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அடுத்தடுத்த சுற்றுப்பயணங்களையும் மேற்கொண்டு தன்னுடைய விடுமுறையை கொண்டாட்டமாக மாற்றிவரும் ஆண்ட்ரியா தற்போது சிக்கிமில் விடுமுறை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. பாடகியாக தன்னுடைய பயணத்தை கோலிவுட்டில் துவங்கிய ஆண்ட்ரியா அடுத்தடுத்து பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட், நடிகை என தன்னுடைய தளங்களை விரிவுபடுத்தி உள்ளார். தற்போது அதிகமான இசை கச்சேரிகளில் இவர் சர்வதேச அளவில் பங்கேற்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இசைக்கச்சேரிகளில் மிகவும் நவீன வகையில் ஆடைகளை அணிந்து கொண்டு நடனமிட்டபடி பாடல் பாடுவது இவரது ஸ்டைல்.
சிக்கிமில் ஆண்ட்ரியா: ஆண்ட்ரியாவின் இந்த ஸ்டைல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து அவரை ட்ரெண்டிங்கில் வைத்து வருகிறது. மேலும் இவர் தன்னுடைய இசைக்கச்சேரிகளின் வீடியோக்கள் மற்றும் தன்னுடைய புகைப்படங்கள் ஆகியவற்றை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலும் ஈடுபட்டு வருகிறார் ஆண்ட்ரியா. அந்த வகையில் தற்போது சிக்கிமில் இவர் தொடர்ந்து சில தினங்களாக சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அடுத்தடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பயணத்தை மாற்றிய நிலச்சரிவு: இயற்கை எழில் கொஞ்சும் சிக்கிமின் பல இடங்களில் வீடியோக்களை எடுத்து அவற்றையும் தன்னுடைய instagram பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.தான் தற்போதுள்ள கேங்டாக்கிலிருந்து லாச்சங்கிற்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் இந்த பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவால் இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கேப்ஷனுடன் அவர் அடுத்தடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். இவை அனைத்துமே ஆண்ட்ரியாவின் க்யூட் பக்கங்களை பிரதிபலித்து வருகின்றன.
தேர்ந்தெடுத்த படங்களில் ஆண்ட்ரியா: நாற்பது வயதை நெருங்கியுள்ள ஆண்ட்ரியாவிற்கு வயதே ஆகாதா என்ற கேள்வி தொடர்ந்து ரசிகர்களிடையே காணப்படுகிறது. ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் ஆண்ட்ரியா, நடிப்பில் மட்டும் தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் இவர் நடிகையாக நடித்துள்ள படங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகின்றன.


Click it and Unblock the Notifications