ட்ரெக்கிங்கில் ஆர்வம் காட்டும் நடிகை ஆண்ட்ரியா!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா இப்பொழுது மிஸ்கின் இயக்கத்தில் உருவாகிவரும் பிசாசு 2ல் கதாநாயகியாக நடித்து வருகிறார்

முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் தோன்றும் ஆண்ட்ரியா விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பார்

வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் இப்பொழுது ட்ரெக்கிங் செய்வதில் ஆர்வம் கொண்டு சமீபத்தில் மலை உச்சிக்கு சென்று எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை

சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை

மயங்க வைக்கும் காந்தக் குரலால் பாடகியாக சினிமாவில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா இப்போது வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து வரும் இவர் சமீபகாலமாக தமிழில் நடித்த திரைப்படங்களில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் ஆண்ட்ரியாவுக்கு தரமணி மற்றும் வட சென்னை உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பிசாசு பாகம் 2ல்

பிசாசு பாகம் 2ல்

கதாநாயகியாக நடித்து வரும் அதே சமயம் ஒரு சில முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார் . அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் உடற்பயிற்சி ஆசிரியராக கலக்கியிருப்பார். கை நிறைய படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் இப்பொழுது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு பாகம் இரண்டில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி

பிசாசு பாகம்-1 மிகப்பெரிய வெற்றி பெற்ற சூழலில் அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது இந்த முறையும் பேய் படமாக உருவாகி வரும் பிசாசு2 வில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்து வருகிறார் . மேலும் விஜய்சேதுபதி, பூர்ணா, அஜ்மல்,சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார்.

ஊ சொல்றியா மாமா

ஊ சொல்றியா மாமா

நடிகையான ஆனதற்குப் பிறகும் பாடல் பாடுவதற்கு வரும் வாய்ப்பையும் தவற விடாமல் பாடிவரும் ஆண்ட்ரியாவுக்கு சமீபத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா இந்திய அளவில் மிகப் பெரிய பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது. சமந்தா சிறப்பு தோற்றத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாடல் புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.

Recommended Video

அக்ரமம் பண்ணுறாங்க Producer K.Rajan Angry Speech | Nayanthara, Mammooty
ட்ரெக்கிங் செல்வதில் ஆர்வம்

ட்ரெக்கிங் செல்வதில் ஆர்வம்

புஷ்பா தமிழ் ரீமேக்கில் ஆண்ட்ரியா ஊ சொல்றியா மாமா பாடலை தனக்கே உரித்தான கிக் ஏற்றும் வாய்ஸில் பாடியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இவ்வாறு திரைத் துறையில் மிக பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா இதற்கிடையில் வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் இப்போது உச்சி மலையில் ட்ரெக்கிங் சென்றதோடு இயற்கை எழில் கொஞ்சும் அருவியை ஆனந்தமாய் கண்டு ரசித்தவாறு எடுத்த அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X