ஒல்லி பெல்லியா இருந்தா என்ன..இந்த கிளுகிளுப்பு போதாதா..இளசுகளை இம்சைபடுத்தும் ஆண்ட்ரியா!
சென்னை : நடிகை ஆண்ட்ரியா புடவையில் கொடுத்திருக்கும் போசை பார்த்த ரசிகர்கள் அழகில் மயங்கி விழாத குறையாக ஏகத்திற்கு சொக்கிப்போய் உள்ளனர்.
நடிகை ஆண்ட்ரியா பிசாசு 2 , நோ என்ட்ரி, கா, மாளிகை, மேலும் பெயரிடப்படாத இரண்டு படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
பின்னணி பாடகியான ஆண்ட்ரியா எனக்கு பாட்டு பாடமட்டுமில்ல நடிக்க வரும் என்பதை பல படங்களில் நடித்து நிரூபித்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா
சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஆண்ட்ரியா புடவை,லூஸ் ஹேர், பெரிய பொட்டுடன் வலம் வந்தார். அழகான முகம், அம்சமான நிறம் என அனைத்திலும் மயங்கிப்போன பேன்ஸ் உன் சிரிப்பினில்...என் மனதின் பாதியும் போக.. உன் இமைகளின் கண்ணிமைகளின்.. மென்பார்வையில் மீதியும் தேய என இவரை வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர்.

அடுத்தடுத்த படங்களில்
அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின் கமலுடன் விஸ்ரூபம் திரைப்படத்திலும் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடித்தார். மேலும், தரமணி, துப்பறிவாளன், வட சென்னை, வலியவன், அரண்மனை, என்றென்றும் புன்னகை, மாஸ்டர் உள்ளிட்ட தரமான படங்களில் நடித்து பெயர் எடுத்தார்.

பிசாசு 2
பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி உள்ளார். இதில், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இப்படத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்திருந்தார். ஆனால், அந்த காட்சியை நீக்கி விட்டதாக இயக்குநர் மிஷ்கின் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

சர்ச்சையை கிளப்பிய போஸ்ட்
இணையத்தில் எப்போதுமே தன்னை பிஸியாக வைத்து இருக்கும் ஆண்ட்ரியா மகளிர் தினத்தில் மொத்த முதுகையும் காட்டி டிரெஸ்ஸே போடாமல் போர்வையை மட்டும் போர்த்திக் கொண்டு, இன்றும், என்றென்றும் பெண்ணாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார். அவரின் இந்த பதிவு இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கிளுகிளுப்பு குறையல
இந்நிலையில் தற்போது இவர் மஞ்சள் சேலையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புடவைக்கு ஏற்றார் போல மார்டன் கொண்டை போட்டுக்கொண்டு, காதில் கம்மல் போட்டு, சின்ன பொட்டு வைத்து தேவதைப்போல ஜொலித்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ஒல்லி பெல்லி இடையாக இருந்தாலும்,அந்த கிளுகிளுப்பு குறையேவே இல்லையே என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











