போங்க ஆண்ட்ரியா... இதெல்லாம் நல்லாவா இருக்கு..இணையத்தில் டிரெண்டாகும் பிக்ஸ்!

சென்னை: தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர், கமல் ஹாசனுடன் இணைந்து விஸ்வரூபம் படத்தில் நடித்தார். இப்போது பிஸியான நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, அந்நியன் படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் நோக்கியா, வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற கற்க கற்க, ஆதவன் படத்தில் இடம்பெற்ற ஏனோ ஏனோ உள்ளிட்ட பல பாடல்களை பாடி உள்ளார். பாடகியாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் கலக்கினார்.

Actress Andrea jeremiah latest pics trending on social media

பச்சைக்கிளி முத்துச்சரம்: இதையடுத்து நடிகை ஆண்ட்ரியா சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஆண்ட்ரியா புடவை, லூஸ் ஹேர், பெரிய பொட்டுடன் வலம் வந்து நடிகர்களின் பேவரைட் ஹீரோயின் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்தவர் காதல் வலையில் விழுந்தார். அவர் இசையமைப்பாளருடன் நெருக்கமாக இருந்த போட்டோ இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளானது.

Actress Andrea jeremiah latest pics trending on social media

புகழின் உச்சிக்கு சென்றார்: பின் அந்த காதல் தோல்வி அடைய சில நாட்கள் படங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தார். பின் அதில் இருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, மீண்டும் திரைப்படத்தில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். அண்மையில் அவர் புஷ்பா படத்திற்காக பாடிய ஊ சொல்றியா மாமா பாடல், மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகி ஆண்ட்ரியாவை டாப்புக்கு கொண்டு சென்றது.

Actress Andrea jeremiah latest pics trending on social media

போங்க ஆண்ட்ரியா: சமூக வலைதளங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகை ஆண்ட்ரியா, தற்போது சிட்னியில் ஜாலியாக விடுமுறையை கொண்டாடி வருகிறார். வெள்ளை உடையில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் இந்த போட்டோவிற்கு லைக்குகளை குவித்து வரும் நிலையில் சில ரசிகர்கள் போங்க ஆண்ட்ரியா... இதெல்லாம் நல்லாவா இருக்கு என்று கேட்டு வருகின்றனர்.

நடிகை ஆண்ட்ரியா: கணிசமான படங்களை கையில் வைத்துக்கொண்டு நடித்து வரும் ஆண்ட்ரியா, அணமையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார். நானும் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டு இருக்கிறேன். தெருவில் நடந்து போகும்போது, திடீரென பின்னால் வந்து என்னை தட்டி விட்டு செல்வார்கள், சில நேரம் எல்லை மீறுவார்கள். இதை சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று பேசி இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X