Don't Miss!
- News
பிரதமர் மோடி வருகை.. சென்னைவாசிகளே இந்த பக்கம் போகாதீங்க.. நெரிசலில் சிக்கவேண்டியிருக்கும்
- Sports
நிறைய தப்பு பண்ணிட்டோம்.. தோல்விக்கு பிறகு கலங்கிய ராகுல்.. துள்ளிகுதித்த டுபிளஸிஸ்
- Finance
சென்னை ஐஐடி நிறுவனத்துடன் இந்தியா சிமெண்ட்ஸ் ஒப்பந்தம்.. எதற்காக தெரியுமா..? #3D
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுவற்றில் சாய்ந்து கனவுகள் காணும் ஆண்ட்ரியா!
சென்னை : வித்தியாசமான கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா
பாடகியாக அறிமுகமாகி இப்போது மிகச் சிறந்த நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்துள்ளார்
மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு இரண்டில் நடித்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது சுவற்றில் சாய்ந்தவாறு கனவுகள் காணும் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது
வாவ் செம... 5 வருடங்களுக்கு பிறகு... மீண்டும் என்ட்ரி கொடுக்கும் மீரா ஜாஸ்மின்!

பாடகியாக அறிமுகமானவர்
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா ஆரம்பத்தில் திரைத்துறையில் பாடகியாக அறிமுகமானவர் இவரது மயக்கும் குரலுக்கு அடிமையானவர்கள் இன்றும் பல கோடி பேர் இந்த நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இப்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக உள்ளார்

ஊ சொல்றியா மாமா
மற்ற நடிகைகளைப் போல் அல்லாமல் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியா தரமணி,வடசென்னை என தரமான கதைகளில் நடித்து வருகிறார் தரமணி, வடசென்னை இவருக்கு கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து பல விருதுகளும் இவருக்கு கிடைத்தது. இவ்வாறு நடிப்பிலும் பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கும் அதேசமயம் பாடல்களின் மூலமும் ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலை பாடினார் . தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தமிழ் பதிப்பில் ஊ சொல்றியா மாமா பாடலை ஆண்ட்ரியா தனது மயக்கும் குரலால் பாடி ரசிகர்களை கிறங்க வைத்தார்

பிசாசு 2
பிசாசு வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஸ்கின் தற்போது அதன் இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார் தமிழ் சினிமாவில் பல பேய் படங்கள் வெளியாகி இருந்தாலும் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு இன்றும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை மிக நெருக்கமான இடத்தை பிடித்துள்ளது இந்த நிலையில் பிசாசு 2 படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது

சுவற்றில் சாய்ந்தவாறு கனவுகள்
இந்த முறை நடிகை ஆண்ட்ரியா இதில் லீட் ரோலில் நடித்து வருகிறார் மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அதுமட்டுமல்லாமல் அஜ்மல், பூர்ணா மற்றும் சார்பட்டா பரம்பரை புகழ் சந்தோஷ் ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர. இவ்வாறு நடிகையாகவும் மற்றும் பாடகியாகவும் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகை ஆண்ட்ரியா இப்போது சுவற்றில் சாய்ந்தவாறு கனவுகள் காணும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் விசாரித்து வருகின்றனர்.