ராஜமாதா போல கம்பீரமாக சேலையில் தெறிக்கவிடும் நடிகை ஆண்ட்ரியா!
சென்னை : நடிகை ஆண்ட்ரியா முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதோடு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளையும் தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்
பிசாசு வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை மிஷ்கின் இயக்கி வர இதில் ஆண்ட்ரியா பேயாக நடித்து வருகிறார்
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் பிசாசு 2ல் நடித்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது ராஜமாதா போல கம்பீரமாக சேலையில் உள்ள புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு தெறிக்க விட்டுள்ளார்.
போல்டான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பாடகி, நடிகை என பல முகங்களை கொண்டுள்ள நடிகை ஆண்ட்ரியா தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். நடிகைகள் பலரும் தயங்கும் போல்டான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பாராட்டுகளையும் விருதுகளையும் வென்று வரும் ஆண்ட்ரியா தரமணி, வடசென்னை போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றார்.

பிசாசு இரண்டாவது பாகம்
தனித்துவமான டார்க் படங்களுக்கு பெயர் போன இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் முற்றிலும் புதிய ஹாரர் கதைகளத்தில் வெளியான பிசாசு வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுது அதன் இரண்டாவது பாகம் உருவாகி வருகிறது.

ஆண்ட்ரியா பேயாக நடிக்கிறார்
மிகக்குறைந்த பட்ஜெட்டில் படங்களை உருவாக்கி அதை வெற்றிப்படமாக கொடுத்துவரும் மிஷ்கின் இப்பொழுது பிசாசு பாகம் இரண்டையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை ஆண்ட்ரியா பேயாக நடிக்க விஜய் சேதுபதி, சந்தோஷ் பிரதாப், அஜ்மல், பூர்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

த்ரில்லர் பின்னணி
இதுவரை நடன இயக்குனராக பட்டையை கிளப்பிக் கொண்டிருந்த பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார். அந்த படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு சென்ற மாதம் பூஜையுடன் தொடங்கியது. த்ரில்லர் பின்னணியில் உருவாவதாக படக்குழு அறிவித்திருந்தது.
Recommended Video

ராஜமாதா போல கம்பீரமாக
கடைசியாக ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான அரண்மனை 3 கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வரும் அதே சமயம் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டு வைரலாகி வரும் ஆண்ட்ரியா இப்பொழுது ராஜமாதா போல கம்பீரமாக சேலையில் உள்ள புகைப்படங்களை பதிவிட்டு தெறிக்க விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











